Advertisment
Presenting Partner
Desktop GIF

மீனாட்சி பொண்ணுங்க ட்விஸ்ட்: அஸ்தி கரைத்த பிறகு மீனாட்சி உயிரோடு வறாங்களா... என்னப்பா சொல்றீங்க?

மீனாட்சி கேரக்டரின் அஸ்தி வந்துவிட்டதால் அவரின் கேரக்டர் இனி சீரியலில் இல்லையா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Meenakshmi Sriranjani

மீனாட்சியாக ஸ்ரீரஞ்சனி என்ட்ரி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. மூன்றும் பெண் குழந்தைகளாக பிறந்ததால் கணவர் கைவிட்ட நிலையில் மீனாட்சி என்ற பெண் தன்னந்தனியாக தனது மூன்று பெண் பிள்ளைகளை கரை சேர்க்க துடிக்கும் கதைதான் இந்த மீனாட்சி பொண்ணுங்க சீரியல்.

Advertisment

இந்த சீரியலில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா நடித்து வந்தார். இவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், திடீரென தவிர்க்க முடியாத சில காரணங்களால் அர்ச்சனா இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அர்ச்சனா விலகியதை தொடர்ந்து சமீபத்திய எபிசோடுகள் மீனாட்சி கேரக்டர் இல்லாமல் சீரியல் கதைக்களம் நகர்ந்து வந்தது.

publive-image
நடிகை ஸ்ரீரஞ்சனி

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீனாட்சி தீ விபத்து ஒன்றில் இறந்து விட்டார் என சிலர் அஸ்தியை எடுத்து வந்து கொடுத்தனர். இதனால் சீரியல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தாலும் அர்ச்சனாவின் விலகல் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மீனாட்சி கேரக்டரில் அடுத்து நடிக்க உள்ள நடிகை யார் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்தது.

மேலும் மீனாட்சி கேரக்டரின் அஸ்தி வந்துவிட்டதால் அவரின் கேரக்டர் இனி சீரியலில் இல்லையா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்த நிலையில் தற்போது மீனாட்சியாக அதிரடி என்ட்ரி கொடுத்துள்ளார் சீரியல் நடிகை ஸ்ரீரஞ்சனி. இது குறித்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. புதிய மீனாட்சி என்ட்ரி ஆகியுள்ளதால் இனி சீரியல் கதைக்களம் மீண்டும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அலைபாயுதே படத்தின் மூலம் தமிழி் சினிமாவில் அறிமுகமான நடிகை ஸ்ரீரஞ்சனி செல்லமே, அந்நியன், சரவணா, திமிரு, சிங்கம் 2 அண்ணாத்த, டிரைவர் ஜமுனா உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். 1999-ம் ஆண்டு காசளவு நேசம் என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் என்ட்ரி ஆன இவர், மகராசி, பிரியமான தோழி, சந்திரலேகா உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ள நிலையில், தற்போது மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் அர்ச்சனாவாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment