Advertisment

மு.க.ஸ்டாலின் வகுப்புத் தோழர்... பிரபல நடிகர்... இன்றைய நிலை என்ன தெரியுமா?

Tamilnadu News Update : கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் டிபி கஜேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில,அவரது கல்லூரி தோழரான முதல்வர் ஸ்டாலின் அவருக்கு உதவி செய்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மு.க.ஸ்டாலின் வகுப்புத் தோழர்... பிரபல நடிகர்... இன்றைய நிலை என்ன தெரியுமா?

Tamil Cinema Actor T P Gajendran Update : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநரும் நடிகருமான டிபி கஜேந்திரன் தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்கலியின் உதவியுடன் நடமாடும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் கடந்த 1988-ம் ஆண்டு விசு மற்றும் கே.ஆர்.விஜயா நடிப்பில் வெளியான வீடு மனைவ மக்கள் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் டிபி கஜேந்திரன். தொடர்ந்து, எங்க ஊரு காவல்காரன், தாயா தாரமா, பாட்டு வாத்தியார், பட்ஜெட் பத்மநாபன் சீனா தானா உள்ளிட்ட பல படங்ளை இயக்கியுள்ளார். கடைசியாக மகனே என் மருமகனே என்ற படத்தை இயக்கியிருந்தார்.

மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான் பாலச்சந்தர், விசு ராம நாராயணன் உள்ளிட்ட இயக்குநர்களுடன் சுமார் 60-க்கு மேற்பட்ட படங்களில் உதவி மற்றும் இணை இயக்குநராக பணியாற்றியுள்ள டிபி கஜேந்திரன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து மக்களை சிரிக்க வைத்துள்ளார். 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் உள்ள அவர் தற்போது உடல்நலக்குறைவால் சுயநினைவு இழந்து சக்கர நாற்காலியில் நடமாடி வருகிறார்.

தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், டிபி கஜேந்திரனும், விவேகானந்தா கல்லூரியில் பியூசி ஒன்றாக படித்துள்ளனர். அங்கு மலர்ந்த இவர்களின் நட்பு இளங்கலை பட்டப்படிப்பிலும் தொடர்ந்தது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த டிபி கஜேந்திரன், சிறுவயதிலேயே சென்னையில் குடியேறி வடபழனியில் வசித்துவந்துள்ளர். சாலிகிராமத்தில், லாஜ்ட் ஒன்றை நடத்தி வந்த இவர், அந் லாஜ்சின் முதல் தளத்திற்கு விசு பெயரையும், 2-வது தளத்திற்கு பாலச்சந்தர் பெயரையும் 3-வது தளத்திற்கு பாரதி ராஜா பெயரையும் வைத்து தனது நன்றியுணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் டிபி கஜேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில,அவரது கல்லூரி தோழரான முதல்வர் ஸ்டாலின் அவருக்கு உதவி செய்துள்ளார். அல்சைமைர் பிரச்சினை காரணமாக தனது ஞாபகசக்தியை இவர் இழந்து வருகிறார். எனவே அவரிடம் பேச்சு கொடுத்தக்கொண்டிருந்தால் பழைய நினைவுகளை கொண்ட வர முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில தனங்களுக்கு முன்பு தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கிளம்பிய வதந்திக்கு சமூக வலைதளங்கள் மூலம் பதில் அளித்த அவர், தான் நலமுடன் இருப்பதாகவும், மக்கள் தனக்கு ஆதவரளித்து படவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். தான் நலமாக இந்த நேரத்தில் நண்பர்களுக்காக பாரபட்சம் பார்க்காமல் செலவு செய்த டிபி கஜேந்திரன் இப்போதும் அதே நிலையை தொடர நினைத்தாலும அவரால் முடியவில்லை.

இவரின் நிலைமைய அறிந்த நடிகர் பிரபு சமீபத்தில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது பள்ளி கல்லூரி மற்றும் சினிமா துறையில் உள்ள நண்பர்கள் பலரும் அவரைதொடர்பு கொண்டு அவரிடம் பேசி உற்சாகப்படுத்தி வருகின்றனர். விரைவில் அவர் மீண்டு வரவேண்டும் என்று அவரது நண்பர்கள் பலரும் வேண்டிக்கொண்டிருக்கின்றனர்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment