அண்ணாத்த ஒன் மேன் ஷோ… நன்றி தலைவா… சிவகார்த்திகேயன் முதல் கார்த்திக் சுப்புராஜ் வரை பிரபலங்கள் ட்விட்

Tamil Cinema Update : பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அண்ணாத்த திரைப்படம் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் மக்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் திளைத்துக்கொண்டிருக்கும் நிலையில், ரஜினி ரசிகர்களுக்கு மேலும் ஒரு சிறப்பு விருந்தாக அண்ணாத்த படம் தியேட்டரில் வெளியாகியுள்ளது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். இதில் ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ , மீனா, பிரகாஷ்ராஜ்,  ஜெகபதி பாபு சூரி, சதீஷ், சத்யன்என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

டி.இமான் இசைமைத்துள்ள இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் மோஷன் போஸ்டர், டீசர், டிரெய்லர் என அடுத்தடுத்து வெளியாக படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்த நிலையில், கடந்த வாரம் இந்த படத்தில் ஆடியோ வெளியாகி மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அண்ணாத்த படம் இன்று வெளியாகியுள்ளது.

தனது தங்கை மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிகாந்த், ஊர் பிரச்சனைகளை பயம் இல்லாமல் தட்டி கேட்கிறார். ரஜினியை போலவே அவரது தங்கை கீர்த்தி சுரேஷூம் அண்ணன் மீது பாசமாக இருக்கிறார். அதுவரை அண்ணன்தாக் தன் உலகம் என்று இருந்த கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்கு பிறகு வேறு ஒரு உலகத்தை காண்கிறார். இதனால் அவர் சந்திக்கும் பிரச்சனை மற்றும் ரஜினியின் ஆக்ஷன் செண்டிமெண்ட் காட்சிகளுடன் படம் இருக்கும்.

வழக்கமான அண்ணன் தங்கை பாசத்தின் கதைதான் என்றாலும், ரஜினியின் மாஸ் மற்றும் கூர்மையான வசனங்கள் மூலம் சிறுத்தை சிவா படத்தை ஓரளவு கொண்டு சென்றுள்ளார். சமீபத்தில் தாதா சாகிப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தின் மூலம் மக்களை சந்தித்துள்ளார். மேலும் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், படம் வசூலை வாரி குவிக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் குறித்து பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்?

நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பதிவில், அண்ணாத்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி ஜெய்பீம் எனிமி படக்குழுவினருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். தீபாவளிக்கு வெளியாகியுள்ள அண்ணாத்த, எனிமி, ஜெய்பீம் ஆகிய 3 படங்களிலும் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பதிவில், என்ன ஒரு எனர்ஜி….வசீகரம்… கவர்ச்சி & ஸ்டைல்….. தலைவா… தலைவர் அவர் தோன்றும் ஒவ்வொரு ப்ரேமையும் ஒளிரச் செய்து திரையை ஆக்கிரமித்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பதிவில், அண்ணாத்தே ஒன் மேன் ஷோ எங்களை மகிழ்வித்ததற்கு நன்றி தலைவா ஒருமுறை தலைவர் ரசிகன் என்றால் எப்போதும் தலைவர் ரசிகன் தான் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் ரசிகர்கள் பலரும் தியேட்டரில் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் குறித்து விடியோ பதிவை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அண்ணாத்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதில் சிலர் படத்தை பார்த்து விட்டு விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil movie annaathe released in theater vip opinion for annaathe

Next Story
பாகுபலி பிரச்சனை… நடிகனாக இருப்பது குற்றமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com