Annaatthe Movie Collection Report Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கதத்தில் நடித்த படம் அண்ணாத்த.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று (நவம்பர் 04) வெளியான இந்த படத்தில நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, சூரி, பாண்டியராஜன், சதீஷ் நட்சத்திர பட்டாளங்கள் பலரும் நடித்திருந்தனர். டி இமான் இசையமைத்திருந்த இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டாக தயாரித்துள்ளது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. ரஜினி பல வருடங்களுக்கு பிறகு கிராமத்து கதையில் நடித்திருந்தாலும், பல படங்களில் பார்த்து பழகிய காட்சிகள் என்று விமர்சனங்கள் எழுந்தது. இதில் காலையில் முதல் ஷோ பார்த்த ரஜினி ரசிகர்கள் பலரும் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும், பல படங்களில் பார்த்து பழகிய காட்சிகளே அதிகம் இருப்பதால் ரசிக்க முடியவில்லை என்று கூறியிருந்தார்.
ஆனாலும் ரஜினி ரசிகர்கள் பலர் படம் மாஸ் ஹிட் தலைவர் கலக்கிட்டாரு என்று கூறி படத்திற்கு சென்றுகொண்டிருக்கும் நிலையில், அண்ணன் தங்கை செண்டிமெண்ட் படம் என்பதால் பலரும் விடுமுறையை கழிக்க குடும்பம், குடும்பமாக தியேட்டருக்கு சென்று படம் பார்க்கிறார்கள். இந்நிலையில் தற்போது அண்ணாத்த படத்தில் முதல் நாள் வசூல் சிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி அண்ணாத்த படம் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ. 34.92 கோடி வசூல் செய்திருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. இது முதல் நாள் வசூலில் புது சாதனை தான். மேலும் வெளிநாடுகளில் ஆஸ்திரேலியாவில் ரூ. 63 லட்சம் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வசூல் நிலவரம் குறித்து வெளியான தகவல்களை பார்த்த ரசிகர்கள் இதனை கொண்டாடி வரும் நிலையில், அண்ணாத்த படத்தை கடுமையாக விமர்சனம் செய்த பலருக்கும் பதில் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.
ஆனால் ரஜினிகாந்த் நெட்வொர்க் என்ற ட்விட்டர் பக்கத்தில் அண்ணாத்த படம் முதல்நாளில் 72 கோடி வசூலித்துள்ளதாகவும், எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு வசூல் என்ற விபரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே படத்தை ஆன்லையின் வெளியிட தடை விதிக்ககோரி சன்பிச்சர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் படத்தை ஆன்லைனில் வெளியிட தடை விதித்திருந்தது. ஆனாலும் அண்ணாத்த படம் ரிலீஸான சில மணிநேரத்தில் தடையை மீறி ஆன்லைனில் வெளிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ். இதனால் படத்தின் வசூல் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil