scorecardresearch

அசுரன் தனுஷ் மெசேஜ்… ஐஎப்எஸ் அதிகாரி ட்வீட்… கொண்டாடும் நெட்டிசன்கள்!

Tami Cinema Update : கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் வெளியான அசுரன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூல் சீரியாகவும், விமர்சன ரீதியாகவும் ஹிட் அடித்தது.

அசுரன் தனுஷ் மெசேஜ்… ஐஎப்எஸ் அதிகாரி ட்வீட்… கொண்டாடும் நெட்டிசன்கள்!

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற அசுரன் படத்திற்கு நேற்று தேசிய விருது வழங்கப்பட்டது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இந்த படம் குறித்து சுதா ராமன் ஐஎப்எஸ் பதிவிட்டுள்ள ட்விட்டர்  பதிவு பெரும் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிரகான தனுஸ் இயக்குநர் வெற்றிமாறனுடன் 4-வது முறையாக இணைந்த திரைப்படம் அசுரன். கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்த இந்த படம் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூல் சீரியாகவும், விமர்சன ரீதியாகவும் ஹிட் அடித்தது. இந்த படத்தில் நடித்த தனுஷ்க்கும், இயக்குநர் வெற்றிமாறனுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில, நேற்று நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் அவர்கள் இருவருக்கும் விருது அளிக்கப்பட்டது.

இது குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், சுதா ராமன் ஐஎப்எஸ் அசுரன் படத்தில் வரும் தனுஷ் பேசும் படிப்பு குறித்து காட்சியை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டு படிங்க.. படிக்கிறவர்களையும் படிக்க விடுங்க.. படிப்பு ஒன்னு தான் உண்மையான சொத்து பதிவிட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த ஐஎப்எஸ் அதிகாரி சுதா ராமன் இதற்கு முன்பு இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக தனது வாழ்வியல் கதையை பகிர்ந்துகொண்டார். அதில், “மருத்துவக்கனவு ஆனால் பி.இ (BE Biomedical தான் கிடைத்தது. பின் 21ல் திருமணம் விப்ரோவில் (Wipro) வேலை. 2 வருடம் கழித்து வேலையை விட்டு பல தடைகளை தாண்டி 2 முறை ஜேஐபிஎம்இஆர்(JIPMER entrance) எழுதி தோற்றேன். பின்னர் 1 வயது குழந்தையை விட்டுவிட்டு குடிமைப்பணி தேர்வு எழுத சென்னை வந்த எனக்கு முதல் முயற்சியில்ஐஎஃப்எஸ் (IFS) கிடைத்தது.

தோல்விகளும் கேலி கிண்டல்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தான் தர வேண்டும். மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு படித்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக எந்த ஒரு தேர்வையும் எளிதில் எதிர்கொள்ள முடியும் நிச்சயம் வெற்றி பெறவும் முடியும். மதிப்பெண் மட்டுமே வாழ்கை அல்ல. மாணவர்களிடம் இதை அழுத்தமாக சொல்லுங்கள். மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

அசுரன் படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களில் ஒருவராக நடித்திருக்கும் தனுஷ் இறுதிகட்டத்தில், தனது மகனான சிதம்பரத்திடம், நம்மகிட்ட காடு இருந்தா எடுத்துகிடுவாங்க,  காசு பணம் பிடுங்கிக்குவாங்க. ஆனால் படிப்புமட்டும் நம்மகிட்ட இருந்து யாராலையும் எடுத்துக்கவே முடியாது சிதம்பரம் என்று என்று படிப்பின் முக்கியத்துவத்தை 3 வரிகளில் சொல்லியிருப்பார்.  இந்த காட்சி குறித்த மீமை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சுதா ராமன்  தேசிய விருது வாங்கும் அசுரன் படத்தில் ஸ்ட்ராங் மெசேஜ் உள்ளது. படிங்க.. படிக்கிறவர்களையும் படிக்க விடுங்க.. படிப்பு ஒன்னு தான் உண்மையான சொத்து என்று கூறியுள்ளார். இந்த ட்வீட்டை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்து ரீடுவிட் செய்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil movie asuran national award dhanush ifs officer twitt