Advertisment
Presenting Partner
Desktop GIF

Vanangaan Movie Review Live Update: ஒரு சீரியஸ் சிக்கல்: அருண் விஜய் பயங்கரம்: பாலா நம்மை கவர தவறுவதில்லை!

6 வருட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியாகியுள்ள வணங்கான் படத்தின் விமர்சனம் குறித்து தெரிந்துகொள்ள இந்த பதிவில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vanangaan Arun Vijay Bala

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவர் பாலா. குறைந்த படங்களே இயக்கி இருந்தாலும், ஒவ்வொரு படத்திலும் தனித்தன்மையுடன் கதைகளை தேர்வு செய்து இயக்கி வரும் இவர் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் வணங்கான். அருண் விஜய், ரோஷ்னி பிரகாஷ் இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Advertisment

சமுத்தரக்கனி, மிஷ்கின், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் பாலாவுடன் இணைந்து சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். பாலா இயக்கத்தில் கடைசியாக 2018-ம் ஆண்டு நாச்சியார் என்ற படம் திரையரங்கில் வெளியானது. தற்போது 6 வருடங்களுக்கு பிறகு, பாலா இயக்கத்தில் திரையரங்கில் படம் வெளியாவதால், வணங்கான் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வணங்கான் படம் இன்று (ஜனவரி 10) வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் தொடங்கிய இந்த படம் அவர் விலகியதால், அருண் விஜய்க்கு இந்த பட வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

  • Jan 10, 2025 15:58 IST
    வணங்கான் என்ன சொல்ல வருகிறான்?

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் போது , தண்டனைகள் எப்படி இருக்க வேண்டும் என பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கிறார்



  • Jan 10, 2025 15:49 IST
    ஒரு சீரியஸ் சிக்கல்: அருண் விஜய் பயங்கரம்: வணங்கான் விமர்சனம்

    வணங்கான் முக்கியமான சப்ஜெக்ட்", இயக்குனர் பாலா ஒரு சீரியஸ் சிக்கலை கொண்டு வந்து படமாக்கியிருக்கிறார், மிஷ்கினின் பாத்திரம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது, ரோஷினிபிரகாஷ் மற்றும்  ரிதா அபாரமான நடிப்பு.. அழகு இவங்க தான்.. அருண்விஜய் ஒரு மொரடன் போல... பயங்கரம்



  • Advertisment
    Advertisement
  • Jan 10, 2025 15:46 IST
    வணங்கான் முதல் பாதி கொல மாஸ்

    வணங்கானின் முதல் பாதி கொல மாஸ். காமெடி காட்சிகள் பிதாமகன் படம் போலவே நன்றாக வேலை செய்தன. ரோஷ்னி பிரகாஷ் நடிப்பு ரொம்ப நேச்சுரலா நல்லா இருக்கு. அருண்விஜய் நடிப்பு சூப்பர் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கிறது 



  • Jan 10, 2025 15:44 IST
    வணங்கான் பாசிட்டீவ் விமர்சனம்: பாலா நம்மை கவர தவறுவதில்லை:

    வணங்கான் திரைப்படம் எல்லா இடங்களிலிருந்தும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இயக்குனர் பாலா நம்மை கவர தவறுவதில்லை என பதிவிட்டுள்ளார்.



  • Jan 10, 2025 15:42 IST
    அருண் விஜய் கில்லர் ஃபர்பாமன்ஸ்

    அருண் விஜய் கில்லர் ஃபர்பாமன்ஸ்



  • Jan 10, 2025 15:41 IST
    வணங்கானுக்கு மிகவும் தகுதியான பாசிட்டிவ் ரிப்போர்ட்

    வணங்கானுக்கு மிகவும் தகுதியான பாசிட்டிவ் ரிப்போர்ட் கிடைத்துள்ளது பாலா சார் ஒரு உணர்ச்சிகரமான தலைப்பை மிகவும் உறுதியான உணர்வுப்பூர்வமாக நிரம்பிய கைவினைப்பொருளுடன் எடுத்துள்ளார் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

    https://x.com/Harris0Forever/status/1877658188184531106



  • Jan 10, 2025 14:16 IST
    நடிப்பு அருண் விஜய், இசை ஜி.வி.பிரகாஷ்: குவியும் பாராட்டுக்கள்

    வணங்கான் முதல் பாதி அருண் விஜய் நடிப்பு தனித்துவமானது மற்றும் ஜி.வி.பிரகாஷ தன் வேலையை நன்றாக செய்துள்ளார்.. அங்கும் இங்கும் சில பின்னடைவுகள் இல்லையெனில் நல்ல இடைவேளையுடன் முதல் பாதியில் நன்றாக இருக்கிறது.  2வது பாதி வேகத்தை தக்க வைத்துக் கொண்டால், பார்வையாளர்களுக்கு எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தும். 



  • Jan 10, 2025 14:12 IST
    பிதாமகன் படத்தை நினைவுபடுத்தும் வணங்கான்

    வணங்கான்  முழு படமும் நந்தாவில் ஒரே காட்சியாக இருந்தது. அருண்விஜய் கேரக்டர் பிதாமகன் விக்ரமை நினைவுபடுத்தினாலும், அவரின் நடிப்பு நன்றாக இருக்கிறது. ரோஷினி நடிப்பு நன்றாக இருக்கிறது ஆனால் ஸ்கோப் இல்லை. பின்னணி இசை சூப்பர். முதல் பாதி கதை இல்லை. 2வது பாதி சராசரியாக இருக்கிறது. மிஸ்கின் கேரக்டர் நன்றாக உள்ளது. வன்முறை அதிகம். சராசரிக்கும் கீழே பலவீனமான திரைக்கதை



  • Jan 10, 2025 14:08 IST
    யூகிக்கக்கூடிய கதை. சலிப்பூட்டும் திரைக்கதை: வணங்கான் விமர்சனம்

    மிகவும் காலாவதியான மற்றும் யூகிக்கக்கூடிய கதை. சலிப்பூட்டும் திரைக்கதை. பொறுமையை சோதிப்பவர். சூர்யா கிரேட் எஸ்கேப். மோசமான. நேர விரயம்.



  • Jan 10, 2025 14:06 IST
    க்ளைமேக்ஸ் நிச்சயம் டிஸ்டர்ப் பண்ணும்: வணங்கான் விமர்சனம்

    வணங்கான் சூப்பர் படம். அருண்விஜய் சிறப்பாக நடித்துள்ளார். இந்த படத்தின் க்ளைமேக்ஸ் சில நாட்கள் நம்மை தூங்கவிடாமல் தொல்லை தரும் என்ற ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 



  • Jan 10, 2025 14:04 IST
    பொங்கல் சம்பவம், கடின உழைப்பு வீன் போகாது: வணங்கான் விமர்சனம்

    என்ன மாதிரி ஆக்டிங் அண்ணா, பொங்கல் சம்பவம் கடின உழைப்பு வீண் போகாது என்ற ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 



  • Jan 10, 2025 13:09 IST
    முதல் பாதி டீசண்ட்: அருண் விஜய் சூப்பர்: ஜி.வி.பிரகாஷ் வெறித்தனம்

    முதல்பாதி டீசண்டாக உள்ளது. அருண் விஜய் ஃபர்பாமன்ஸ் சூப்பர். சண்டைக்காட்சிகள் இயல்பாக உள்ளது, ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசை வெறித்தனம் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். 



  • Jan 10, 2025 12:24 IST
    பெரிய திரையில் வெளிவராத சாகசத்தின் சாட்சி: ஒரு ரசிகனின் பதிவு

    பழிவாங்குதல் எரிகிறது, உணர்ச்சிகள் உயரும், காதல் ஆழமாக தாக்குகிறது. அருண்விஜய் வணங்கான் இன்று முதல் திரையரங்குகளில் புயல். பெரிய திரையில் வெளிவராத சாகசத்தின் சாட்சி! என்று ரமேஷ் பாலா என்பவர் பதிவிட்டுள்ளார்.



  • Jan 10, 2025 11:37 IST
    இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வாழ்த்து

    பொங்கல் தினத்தை முன்னிட்டு பாலா அருண் விஜய் கூட்டணியில் வெளியாகியுள்ள வணங்கான் திரைப்படத்திற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.



  • Jan 10, 2025 11:34 IST
    முடிவுக்கு வந்த கே.டி.எம்.பிரச்னை: வணங்கான் படம் வெளியானது

    கே.டி.எம்.பிரச்னை தொடர்பாக வணங்கான் படததின் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது பிரச்னை தீர்க்கப்பட்டு, வணங்கான் படம் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. 



  • Jan 10, 2025 10:39 IST
    10 மணி காட்சிகளும் ரத்து செய்யப்பட்டதாக தகவல்!

    தமிழ்நாட்டில் வணங்கான் திரைப்படத்தின் 9, 10 மற்றும் 10.30 மணி கட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.



  • Jan 10, 2025 10:35 IST
    வணங்கான் திரைப்படத்தின் 9 மணி காட்சிகள் ரத்து

    பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாலா - அருண் விஜய் கூட்டணியில் இந்த வெளியாக இருந்த வணங்கான் திரைப்படத்தின் காலை 9 மணி காட்சிகள் பல இடங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 



  • Jan 10, 2025 10:29 IST
    6 வருட இடைவெளியை பூர்த்தி செய்தாரா பாலா?

    பாலா இயக்கத்தில் கடைசியாக திரையரங்கில் வெளியான படம் நாச்சியார். ஜோதிகா ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடித்த இந்த படம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது. அதன்பிறகு பாலா இயக்கிய வர்மா ஒடிடி தளத்தில் வெளியான நிலையில், 6 வருட இடைவெளிக்கு பிறகு பாலா இயக்கத்தில் வணங்கான் படம் இன்று திரையலங்கில் வெளியாகியுள்ளது.  



Arun Vijay Bala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment