/tamil-ie/media/media_files/uploads/2023/07/Pooja-Hedge.jpg)
நடிகை பூஜா ஹெக்டே
தமிழில் முகமூடி பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Pooja-Hedge-5.jpg)
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பூஜா ஹெக்டே கடந்த 2012-ம் ஆண்டு வெளியான முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Pooja-Hedge-4.jpg)
அதன்பிறகு சரியான வாய்ப்பு கிடைக்காத இவர் தெலுங்கில் கவனம் செலுத்தினார். 2014-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஒக்க லைலா கோசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Pooja-Hedge-3.jpg)
தொடர்ந்து, முகுந்தா சாக்ஷியம், மகரிஷி, ஆலா வைகுந்தபுரம்லோ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Pooja-Hedge-6.jpg)
பூஜா ஹெக்டே கடந்த ஆண்டு வெளியான பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் என்ட்ரி ஆனார். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த படம் பல எதிர்மறையாக விமர்சனங்களை பெற்றது.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Pooja-Hedge-2.jpg)
தற்போது மீண்டும் தெலுங்கில் கவனம் செலுத்தும் பூஜா இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பூஜா ஹெக்டே அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Pooja-Hedge-1.jpg)
இவர் வெளியிடும் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவது வழக்கம். அந்த வகையில் இவர் தற்போது சிகப்பு நிற உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.