பண மோசடி வழக்கில் நடிகர் சூரி நடிகர் விஷ்ணு விஷாலின் அப்பா மீது புகார் அளித்துள்ள நிலையில், இதற்க்காக மறுபடி மறுபடி வருகிறேன் விசாரணை மட்டும் நடைபெறுகிறது என்று சூரி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சூரி, தனக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் 2.70 கோடி பண மோசடி செய்துள்ளதாக சென்னை அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்
இநத புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஏற்கனவே 3 முறை இது தொடர்பான விசாரணைக்கு ஆஜரான நடிகர் சூரி தற்போது 4-வது முறையாக மீண்டும விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். சுமார் 2 மணி நேரம் விசாரணை முடிந்து வெளியில் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில். முன்பெல்லாம் வீட்டை விட்டு வெளியில் வந்தால் என்ன ஷூட்டிங் போய்ட்டு வரியா என்று கேட்பார்கள் ஆனால் இப்போது போலீஸ் ஸ்டேஷன் போய்ட்டு வரியா என்று கேட்கிறார்கள். முதல்முறை வந்தேன் விசாரணை நடத்து. அடுத்து வந்தேன் விசாணை நடந்தது. அதன்பிறகு வந்தேன் விசாரணை நடந்தது. இப்போது வந்திருக்கென் விசாரணை நடந்து. என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து அவரிடம் எதிர் தரப்பினரிடம் விசாரணை நடக்கிறதா என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த நடிகர் சூரி அவர்களிடம் விசாரணை நடப்பது நமக்கு தெரியாது. எனக்கு சாதகமாக எதுவும் நடக்க வேண்டாம் நியாயம் வெற்றி பெற்றால் போதும். விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும். காவல்துறை நீதிமன்றம், கடவுள் அனைவரையும் நம்புகிறேன் சொல்வதற்கு வேறொன்றும் இல்லை என்று கூறியுள்ளார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil