Advertisment

நடிகர் விஜய் முதல் ஷாருக்கான் வரை இவருக்கு நெருக்கம்: யாருன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்!

தமிழ் சினிமாவில் தனது திரை பயணத்தை தொடங்கிய இவர், முதல் படத்திலேயே கவனிக்கப்படும் நட்சத்திரமாக மாறினார்.

author-image
WebDesk
New Update
Atlee

இயக்குனரின சிறுவயது புகைப்படம்

இணையதள வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் இந்த காலக்கட்டத்தில் பல பிரபலங்களில சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவ்வப்போது ட்ரெண்டாகி வருகிறது. இதில் குறிப்பாக திரை பிரபலங்களின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றனது என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது ஒரு திரை பிரபலத்தின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் தனது திரை பயணத்தை தொடங்கிய இவர், முதல் படத்திலேயே கவனிக்கப்படும் நட்சத்திரமாக மாறினார். அதனைத் தொடர்ந்து அடுத்த 3 படங்களிலும் ஒரே நடிகருடன் கூட்டணி அமைத்து தொடர் வெற்றிகப்படங்களை கொடுத்துள்ளார். தமிழில் தொடர்ந்து 4 வெற்றிகளை குவித்த இவர் தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.

தற்போது இந்திய திரையுலகம் அதிகம் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாக ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கான் நயன்தாரா விஜய் சேதுபதி நடித்து வருகின்றனர். படத்தை தமிழ் இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார். இப்போ அட்லியின் சிறுவயது புகைப்படம் தான் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Atlee Kumar

இயக்குனர் அட்லி குமார்

விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என 3 வெற்றிப்படங்களை கொடுத்த அட்லி தற்போது பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தில் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

மேலும் இப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, ப்ரியாமணி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Atlee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment