Doctor Movie BoxOffice Collection Update : கொரோனா தொற்று பாதிப்பினால் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கை மட்டுமே அனுமதிக்கப்பட்டதால், சற்று தோய்வடைந்த தமிழக பாக்ஸ் ஆபீஸை சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் தூக்கி நிறுத்தியுள்ளது.
நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நெல்சன் திலீப்குமார் அடுத்த்தாக இயக்கிய படம் டாக்டர். சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகன் யோகி பாபு என பலர் நடித்திருந்த இந்த படம் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்ட நிலையில், ஒரு வழியாக கடந்த அக்டோபர் 9-ந் தேதி வெளியிடப்பட்டது.
இந்த படம் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. தமிழகம் முழுவதும் திரையரங்குகள் வார நாட்களில் கூட மக்கள் கூட்டம் குறையாத இந்த படத்திற்கு விமர்சகர்கள் மத்தியலும் பாசிட்டிவான கருத்துக்களே வந்த வண்ணம் உள்ளது. மேலும் தசார பண்டிகை விடுமுறை வார இறுதி மற்றும் போட்டிக்கு பெரிய படங்கள் எதுவும் இல்லாத்தால், டாக்டர் பாக்ஸ்ஆபீஸலில் வசூலை குவித்து வருகிறது.
At the end of 2nd weekend #DoctorMovie sets a miracle record of 58 HOUSEFULL shows of 59 played in both screens … This should be the career best opening for @Siva_Kartikeyan brother surpassing his previous best #Remo !!!
👏🏼👏🏼👏🏼@SKProdOffl @Nelsondilpkumar @anirudhofficial 🎉— Rakesh Gowthaman (@VettriTheatres) October 17, 2021
There will be many who hate you for your hard work and success. Ignore them, as success breeds jealousy among your friends and foes. Remember haters only hate the people they can’t be, there is no cure for envy and jealousy. #MondayMotivation
— Sreedhar Pillai (@sri50) October 18, 2021
#Doctor is Huge Huge Huge in our Boxoffice.
Running with Continues Houseful shows💥
3rd Film of this year with huge demands for 2nd week advance booking.@Siva_Kartikeyan & @Nelsondilpkumar combo வேற மாரி வேற மாரி#DoctorInRamCinemas Super Duper Hit 🔥@kjr_studios @SKProdOffl pic.twitter.com/XnRopNgUv0— Ram Muthuram Cinemas (@RamCinemas) October 16, 2021
மேலும் 2-வது வாரத்தில் டாக்டர் படத்தில் மக்கள் கூட்டம் அலைமோதி வருவதால், தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட திரை உரிமையாளர்களுக்கு இது ஒரு பெரிய நிவாரணம் அளிக்கும் வகையில் அமைந்துள்ள. 2 வது வார இறுதியில் டாக்டர் 58 திரையரங்குகளில் 58 காட்சிகளின் அதிசய சாதனையை நிகழ்த்தியுள்ளது. 59 திரைகளின் இரு திரைகளிலும் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சிவகார்த்திகேயனின் முந்தைய திரைப்படமான ரெமோ படத்தின் சாதனையை முறியடிக்கும் என்று சென்னையின் வெற்றி திரையரங்கின் உரிமையாளர் ராகேஷ் கவுதமன் ட்வீட் செய்துள்ளார்.
பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தும் டாக்டர் படம், தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் கட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் மூலம் 2 வது வார முன்கூட்டியே அதிக முன்பதிவு (sic) செய்யப்பட்ட இந்த ஆண்டின் 3-வது படம் ”என்று ராம் முத்துராம் சினிமாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் மட்டுமல்லாது வருண் டாக்டர் என்ற பெயரில் இந்த படம் தெலுங்கிலும் டப் செய்து வெளியிடப்பட்டது. மேலும், வெளிநாடுகளிலும் கூட டாக்டர் வசூல் சாதனையை தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.,இந்த படம் வெளிநாடுகளில் இதுவரை ரூ. 3 கோடிக்கு மேல் சேர்த்துள்ளது என்று கூறப்படுகிறது. இதன் மூலம் டாக்டர் படம் ஒரு பிளாக்பஸ்டர் குடும்ப பொழுதுபோக்கு படமாக மாறி வருகிறது, 2 வது வார இறுதியில் தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளும் நிரம்பியுள்ளன, மேலும் கொரோனா 2 வது அலைக்குப் பிறகு முன்பதிவு செயலிகள் மூலம் அதிக டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.
தற்போது வெளியாகியுள்ள அறிக்கைகளின்படி, டாக்டர் வெளியான 10 நாட்களுக்குள் உலகம் முழுவதும் ரூ .60 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மேலும் வசூல் அதிகரிக்கும் என்பதால் இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வருவாயாக உருவெடுக்கும்.
இயக்குனர் சுந்தர் சி யின் அரண்மனை 3 கூட கடந்த வியாழக்கிழமை வெளியாகி நல்ல ஓப்பனிங் கிடைத்தது. ஆனால் டாக்டர் படத்தை மிஞ்சும் அளவுக்கு இந்த படம் மக்கள் கூட்டத்தை ஈர்க்கவில்லை என்றாலும், அனைத்து பெரிய படங்களும் தீபாவளி தினத்திற்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், த்தற்போது போட்டிக்கு எந்த படங்களும் இல்லை. இதனால் டாக்டர், மற்றும் அரண்மனை 3 வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.@Siva_Kartikeyan's "Family Entertainer" #VarunDoctor attains Break-even collections & heads to 2nd Week🔥
Book Tickets Now https://t.co/ftgl9MwKvC@Nelsondilpkumar @anirudhofficial @priyankaamohan @kjr_studios @SKProdOffl @maheswa26570618 @Gangaentertains @PulagamOfficial pic.twitter.com/sdKqOqnrz7— Vamsi Kaka (@vamsikaka) October 18, 2021
The 𝐃𝐮𝐬𝐬𝐡𝐞𝐫𝐚 𝐁𝐥𝐨𝐜𝐤𝐛𝐮𝐬𝐭𝐞𝐫 #MostEligibleBachelor collects 𝟐𝟒 𝐂𝐫+ 𝐆𝐫𝐨𝐬𝐬 𝐖𝐨𝐫𝐥𝐝𝐰𝐢𝐝𝐞 in 3 Days 🔥
Watch this family entertainer at theatres near you!#AlluAravind @AkhilAkkineni8 @hegdepooja @baskifilmz @GopiSundarOffl @GA2Official @adityamusic pic.twitter.com/n0EpzQxpcy— Vamsi Kaka (@vamsikaka) October 18, 2021
தெலுங்கில் வருண் டாக்டர் என்ற பெயரில் வெளியிடப்பட்ட டாக்டர், தெலுங்கு பாக்ஸ்ஆபீரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. தசரா விடுமுறையில் வெளியான சில தெலுங்கு ஒரிஜினல்களுக்கு மத்தியில் இந்த படம் வசூலை குவித்து வருகிறது. இயக்குநர் பொம்மரில்லு பாஸ்கரின் மோஸ்ட் எலிஜிபுல் பேச்லர் படம் 24 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியடைந்த படத்தின் நாயகி பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பதிவில், “உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள். அது எப்போதும் உங்களை சரியான திசையில் வழிநடத்தும். இன்னொரு வெற்றிப் படம். கடவுளே, நீங்கள் என்னிடம் மிகவும் அன்பாக இருந்தீர்கள். நன்றி. எனது சக நடிகர்கள் மற்றும் பட குழுவினருக்கு வாழ்த்துக்கள். மிக மகிழ்ச்சியாக கொண்டாடு என குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் அஜய் பூபதியின் இயக்கத்தில் ஷர்வானந்த் மற்றும் சித்தார்த் நடித்த மகா சமுத்திரம் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளது. கர்நாடகாவில், சூப்பர் ஸ்டார் சுதீப்பின் கொட்டிகொபா 3 பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்துகிறது. முதல் நாளில் இந்த படம் 12 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். கன்னட சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகரான துனியா விஜய் நடிப்பில் வெளியான சலகா பாக்ஸ் ஆபிஸில் வசூல் நிகழ்த்தி வருகிறது.
கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், திரையரங்குகள் பரபரப்பாக இயங்க தொடங்கியுள்ளன. இந்த படங்களின் வசூல் மூலம் தென்னிந்தியாவில் பெரிய தீபாவளி வெளியீடுகளுக்கு பாக்ஸ் ஆபிஸை தயார் செய்துள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.