தமிழ் ராக்கர்ஸில் புதுப் படங்கள்: கைதுக்கும் பயமில்லை, வழக்குகளுக்கும் அச்சமில்லை

Tamil Movies vs Tamil Rockers: வார இறுதி நாட்களில் முக்கியமான படங்களின் ஹெச்.டி. பிரிண்டையும் வெளியிட்டு அதிர வைக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

Tamil Movie Download 2019: தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் சிலரை காவல் துறை கைது செய்து பார்த்துவிட்டது. பட அதிபர்கள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து பார்த்துவிட்டனர். எதற்கும் அடங்காமல் புதுப் படங்களை தமிழ் ராக்கர்ஸ் ரிலீஸ் செய்து வருவதுதான் சினிமா உலகின் ஆகப் பெரிய சாபம்.

தமிழ் ராக்கர்ஸ் என்கிற திருட்டு இணையதளம் இன்று உலகம் முழுவதும் பிரபலம். கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை எந்த மொழிப் படங்களையும் தியேட்டரில் ரிலீஸான சில மணி நேரங்களில் திருட்டுத்தனமாக தனது இணையதளத்தில் பதிவேற்றிவிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

சமீப நாட்களில் ரஜினிகாந்தின் 2.0, காலா, பேட்ட, அஜீத்தின் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் அன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் தரிசனம் கொடுத்தன. பாகுபலி பிரபாஸின் லேட்டஸ்ட் படமான சாஹோ ரிலீஸான சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸில் வெளியானது. இதனால் பல கோடி ரூபாய் முதல் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், நகம் கடிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள்.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை தடை செய்ய பட அதிபர்கள் பலமுறை நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றிருக்கிறார்கள். நீதிமன்றமே தடை விதித்தாலும், இணையதள முகவரிகளை மாற்றிக்கொண்டு தமிழ் ராக்கர்ஸ் சக்கை போடு போட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

கடந்த ஆண்டு கோவையில் தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூலமாக தமிழ் ராக்கர்ஸின் முழு நெட்வொர்க்கும் பிடிபடும் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால் அந்தச் சிலர் கைதானதோடு சரி! அதன்பிறகு மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் இல்லை.
இதற்கு காரணம், தமிழ் ராக்கர்ஸின் நெட்வொர்க் வெறுமனே தமிழ் நாடு மட்டும் சார்ந்தது இல்லை. அயல் நாடுகளிலும் இதன் அட்மின்கள் இருக்கிறார்கள். குறிப்பாக வெளிநாடுகளில் படங்கள் ரிலீஸாகிறபோதுதான் தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் சுலபமாக ‘காபி’ செய்வதாக தெரிகிறது.

சமீப மாதங்களில் மட்டும் தமிழ் ராக்கர்ஸ் மாற்றிக்கொண்டதாக சொல்லப்படும் சில முகவரிகள் இங்கே:

Tamilrockers .ro, Tamilrockers .ax, tamilrockers-s. co, Tamilrockers .tv, Tamilrockers .com, Tamilrockers .net, Tamilrockers .cc, Tamilrockers .to, Tamilrockers .be, Tamilrockers .pm, Tamilrockers .ws, Tamilrockers .lu, Tamilrockers .la, Tamilrockers .ac, tamilrockers. gy, tamilrockers .cl, tamilrockers . gs, Tamilrockers .li, Tamilrockers .st

தமிழ் ராக்கர்ஸ் எப்படி ஓரிரு எழுத்துகளை மாற்றிக்கொண்டு சட்டத்தை ஏமாற்றுவதுடன், பல்லாயிரம் தொழிலாளர்களின் உழைப்பையும் உறிஞ்சுகிறது என்பதை சுட்டிக்காட்டவே மேற்படி முகவரிகளை குறிப்பிட நேர்ந்தது. இந்த முகவரிகள் தற்போது பயன்பாட்டில் இல்லை. வேறு புதிய முகவரிகளுடன் இன்னமும் ஆட்டத்தை தொடர்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

வார இறுதி நாட்களில் முக்கியமான படங்களின் ஹெச்.டி. பிரிண்டையும் வெளியிட்டு அதிர வைக்கிறது தமிழ் ராக்கர்ஸ். தியேட்டரின் சினிமா டிக்கெட் கட்டண உயர்வு, பார்க்கிங் கட்டணம் முதல் பாப்கார்ன் வரை நடக்கிற கொள்ளைகளும் தமிழ் ராக்கர்ஸ் செழித்துக் கொழிக்க காரணம்தான். ஆனாலும் திருட்டு இணையதளத்தை அதன் மூலமாக நியாயப்படுத்திவிட முடியாது. அரசும், சட்டமும் இரும்புக்கரம் கொண்டு தமிழ் ராக்கர்ஸை அடக்க வேண்டும்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close