Tamil movie kee review: அறிமுக இயக்குனர் காளீஸ் ( இயக்குனர் செல்வராகவனின் உதவி இயக்குனர்) இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி நடிப்பில் மே 10-ம் தேதி (இன்று) வெளியான படம் "கீ".
படம் பார்த்தவர்கள் டுவிட்டரில் சொன்னது...
எஸ். அபிஷேக் :
படத்தில் ஒரு சீனில், ஹீரோ அப்பா பாசத்தை குறித்து பேசுவார். அந்த இடத்தில் நான் குலுங்கி குலுங்கி அழுதேன். இதுவரை எந்த படத்திலும் இப்படியொரு சீனை பார்த்ததில்லை, இந்த சீனை, எனது அப்பாவுடன் இணைத்து பார்த்துக்கொண்டேன். எனது அப்பாவை மிஸ் பண்றேன்
There is a scene in #kee where an actor talks about appa paasam. Tha, kulingu kulingu azhudhen ????
Forever, any film or a scene that connects me and my father, I am just gonna tear out like a baby.
Missing my naina.
— S Abishek (@cinemapayyan) May 10, 2019
ராஜி:
இந்த வார இறுதியில் பார்ப்பதற்கான சிறந்த படம். ஜீவாவின் நடிப்பு சிறப்பு, ஆர்.ஜே. பாலாஜியின் காமெடி கலக்கல், புதுமுக இயக்குனரின் சிறப்பான முயற்சி.
Watched #kee movie it's really good, entertaining and a perfect movie for this weekend..loved @Actorjiiva acting, Kalpakkal comedy as usual by @RJ_Balaji.. a very good attempt by director as his first movie..
— raji (@rajiswathi) May 10, 2019
சித்து:
டீசன்ட்டான த்ரில்லர் படம். புதுமுக இயக்குனரின் யுக்தி பல இடங்களில் பளிச்சிடுகிறது.
கிறிஸ்டோபர் கனகராஜ்:
ஜீவாவின் திரைப்பயணத்தில் இதுவும் ஒரு படம், அவ்வளவுதான்... படத்தின் எந்தவொரு காட்சியும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சீரியசான காட்சிகளில் கூட சிரிப்பு தான் வருகிறது. வில்லனாக வரும் கோவிந்த் பத்மசூர்யா நன்றாக உள்ளார். படத்தில்தான் நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஒழுங்கற்ற எடிட்டிங், பாடல்கள் சிறப்பானதாக இல்லை, தேவையில்லாத சென்டிமென்ட் காட்சிகள், லாஜிக் இல்லாத சினிமா, நேர விரயம்
#Kee - Jiiva‘s wait for success continues.
None of d scenes create any impact, Serious scenes look funny. GP is smart, but no scope to perform. Abrubt editing, worst songs, flat comedies, unwanted sentiments, no logics. Core idea is interesting, but execution fails. Not Worth!
— Christopher Kanagaraj (@Chrissuccess) May 10, 2019
கவுசிக் :
காமெடி, ரொமான்ஸ், சென்டிமென்ட் படத்தில் எதுவும் சிறப்பாக இல்லை. படம், பார்ப்பவர்களின் பொறுமையை சோதிப்பதாக உள்ளது.
#Kee - On the downside, the other commercial elements like comedy, romance, sentiments don't fit in well with the core story and test the patience.@Composer_Vishal's work is impressive - songs and groovy RR. Dop Abhinandan ????.. Smart hero Jiiva & bearded villain GP lead the way
— Kaushik LM (@LMKMovieManiac) May 10, 2019
ஆஷாமீரா அய்யப்பன்:
படத்தில் சொல்லுவதற்கு கூட ஒரு சிறப்பு கூட இல்லை. அதேபோன்று படத்தின் சீன்களும் கோர்வையாக இல்லை. ஒரேவார்த்தையில் சொன்னால், குப்பை படம்.
I'm still searching for words that can describe how problematic and bad #Kee was. There's not even one scene that's good enough or without issues. Extremely disappointed. ????????
— Ashameera Aiyappan (@aashameera) May 10, 2019
இதற்கிடையே புதுப்படங்களை உடனுக்குடன் ஆன் லைனில் திருட்டுத்தனமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ், இந்தப் படத்தையும் பதம் பார்த்துவிடுமோ? என்கிற கவலையும் படக் குழுவினருக்கு இருக்கிறது. அயோக்யா ரிலீஸாகாத சூழலில், வார இறுதி கலெக்ஷனை கீ, குறி வைத்திருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.