பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
லைகா நிறுவனம் தயாரிக்கும் லால்சலாம் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.
லால்சலாம் திரைப்படத்தில் நடிகர்கள் விஷ்ணுவிஷால், விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இந்த படத்தை நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். இதன் முதல்கட்ட படிப்பிடிப்பு ஏற்கனவே மும்பை, திருவண்ணாமலையில் நடந்து முடிந்துள்ளது. இன்று புதுவை ரோடியர் மில் பழைய வளாகத்தில் படப்பிடிப்பு நடப்பதாகவும், நடிகர் ரஜினி பங்கேற்றிருப்பதாகவும் தகவல் வெளியானது.
இதனால் அங்கு ரசிகர்கள் கூட தொடங்கினர். ரோடியர் மில் நுழைவுவாயில் பூட்டப்பட்டிருந்தது. யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து படப்பிடிப்பு குழுவினரை தொடர்புகொண்டு கேட்டபோது, சண்டை காட்சிகளை படம்பிடிக்க படக்குழுவினர் புதுவைக்கு வந்துள்ளனர்.
இன்றைய படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் இடம்பெறவில்லை என்றனர். அதேநேரத்தில் ரோடியர் மில் வளாகத்தில் படப்பிடிப்பு செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வரும் 10ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படம்பிடிக்கப்படுகிறது என்ற தகவலும் வெளியானது. இருப்பினும் தொடர்ந்து விசாரித்ததில் ரஜினிகாந்த் நடந்து வருவது போன்றும் ஒரு சில சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டதாகும் அங்கே உள்ளே இருந்த சினிமா பனிக்குழுவில் பணிபுரியும் சில உள்ளூர் ஊழியர்கள் தெரிவித்தனர் மேலும் உள்ளூர் பிரமுகரை சேர்ந்த ஒரு சிலர் சினிமா சூட்டிங் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் அவர்கள் தனது செல்போனில் ரஜினிகாந்த் நடந்து வருவது போன்றும் வணக்கம் சொல்வது போன்று வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
அதன்பின்பு ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறுகையில் ரஜினி இன்று நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நாளை மறுநாள் அவர் நடிக்கும் காட்சிகள் எடுக்கப்படவுள்ளது .என தெரிவித்தனர் .இந்த சூட்டிங் குறைந்த பட்சம் பத்து நாட்கள் நடப்பதாக தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“