இயக்குனராக வெற்றி பெற்ற பிரதீப் தன்னுடைய அடுத்த படத்தில் நடிகராக வெற்றி பெறவேண்டும் என்ற நம்பிக்கையோடு ஹீரோவாக அறிமுகமாகி தன்னுடைய அசத்தலான நடிப்பால் பாராட்டுகளை அள்ளுகிறார்.
லவ் டுடே திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.
கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருக்கும் படம் லவ் டுடே. நாயகனும் நாயகியும் காதலிக்கிறார்கள், நாயகி தன் அப்பாவிடம் தன் காதலை வெளிப்படுத்தும் போது அவருடைய அப்பா இருவருடைய செல்போனையும் வாங்கி மாற்றி கொடுத்து விடுகிறார். அதன் பின் இருவருடைய வாழ்விலும்,காதலிலும் நடக்கும் கலகலப்பான நிகழ்வுகள், இறுதியில் இவர்களுடைய காதல் வென்றதா இல்லையா என்பதே இன்றைய லவ்டே.
Advertisment
இயக்குனராக வெற்றி பெற்ற பிரதீப் தன்னுடைய அடுத்த படத்தில் நடிகராக வெற்றி பெறவேண்டும் என்ற நம்பிக்கையோடு ஹீரோவாக அறிமுகமாகி தன்னுடைய அசத்தலான நடிப்பால் பாராட்டுகளை அள்ளுகிறார். நாயகியாக வரும் இவானா இதற்கு முன் ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் அவருடைய முழு நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தி ஒரு அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
முதல் பாதியில் சிரிப்பிலும்,இரண்டாம் பாதியில் எமோஷனலிலும் கலக்கி இருக்கும் இவானா நடிப்பில் இன்னும் பல உயரங்களை அடைய வாழ்த்துக்கள். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு கச்சிதமாக பொருந்தும் ஒரு சில நடிகர்களில் சத்யராஜும் ஒருவர். அதற்கேற்றார் போல இப்படத்தில் பிராமணராக வந்து நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார். அம்மாவாக வரும் ராதிகாவின் வசனங்களும், எமோஷனல் காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பும் கலங்கடிக்கிறது.
யோகி பாபுவை காமெடினாக பல படங்களின் ரசித்திருந்தாலும் இப்படம் அவருக்குள் இருக்கும் சிறந்த நடிகனை வெளிபடுத்த உதவியிருக்கிறது. படத்தின் விறுவிறுப்பிற்கும் திரைக்கதைக்கும் மற்றுமொரு கிரீடமாக இருப்பது யுவன் சங்கர் ராஜாவின் ஆத்மார்த்தமான இசை.கடைசியாக வந்த அவருடைய படங்களில் பெஸ்ட் இதுதான். பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் விதம்.
"ஆப் லாக்" என்ற பிரதிப்பின் பழைய குறும்படத்தின் நீட்டிப்பு தான் இப்படம் என்றாலும் இப்படத்தின் திரைக்கதையில் இருக்கும் சுவாரசியமும், முதல் பாதியில் வரும் கலாட்டாக்களும், ஆங்காங்கே வரும் சமூக கருத்துக்களும், இன்றைய இளைஞர்களுக்கு தேவையான வசனங்களும் ரசிகர்களை மிரட்டி இருக்கிறது. பிரதீப்பும் அவருடைய குழுவினர்களும் இப்படத்திற்காக எந்த அளவிற்கு உண்மையாகவும், நியாயமாகவும் உழைத்திருக்கிறார்கள் என்பதை இப்படத்தின் திரைக்கதை மக்களுக்கு எடுத்துரைக்கும்.
காதலர்களுக்குள் இருக்கும் ஆழமான நம்பிக்கையே அவர்களின் காதலை வளர்க்கும் என்ற கருத்தின் அடிப்படையில் முடியும் இப்படம் அழகான முறையில் மக்களிடையே பாராட்டுகளை பெறுகிறது. மொத்தத்தில் லவ் டுடே இன்றைய காதல் சுற்றுசூழலின் அற்புதமான பிரதிபலிப்பு.
நவீன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“