மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியின் கடைசி படம் என்ற அடையாளத்துடன் வெளியான மாமன்னன் திரைப்படத்தின் 2-வது நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் பக்ரீத் பண்டியையை முன்னிட்டு வெளியான படம் மாமன்னன். தமிழக அரசியலில் அமைச்சர் பதவியில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
சாதி அரசியலை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தில், வடிவேலு இதுவரை இல்லாத முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாகவும், துடிப்பான இளைஞராக வடிவேலுவின் மகன் கேரக்டரில் உதயநிதி நடித்துள்ளதாகவும் தகவல் வெளியானதால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், கடந்த ஜூன் 29-ந் தேதி படம் வெளியானது. முதல் நாளில் நல்ல விமர்சனங்களை பெற்ற இந்த படம் சுமார் 10 கோடி வசூலித்ததாக தகவல் வெளியானது.
ஆனால் அடுத்த நாளான நேற்று (ஜூன் 30) படத்தின் வசூல் குறைந்து ரூ 7 கோடி தான் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. விமர்சன ரீதியான படத்தின் முதல் பாதி நன்றாக இருக்கிறது என்றும் 2-ம் பாதி விறுவிறுப்பு இல்லை என்றும் கூறப்பட்ட நிலையில், வசூலில் 2-வது நாளிலேயே மாமன்னன் டல் அடித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மாமன்னன் படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”