scorecardresearch

டி.இமான் மறுமணம்… மணப் பெண் யார்?

Tamil Cinema Update : கடந்த 2019-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திற்காக டி.இமான் சிறந்த இசையமைப்பாளருக்காக தேசிய விருதை வென்றார்.

டி.இமான் மறுமணம்… மணப் பெண் யார்?

Music Director D.Imman Marriage Update : தமிழ் சினிமாவில் கடந்த 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். தொடர்ந்து முன்னணிட நடிகள் பலருடன் இணைந்து பல ஹிட் பால்களை கொடுத்த இமான், சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம, விமலின். தேசிங்கு ராஜா, விக்ரம் பிரபுவின் அறிமுக படமாக மைனா, கும்கி, கயல் உள்ளிடட படங்களில் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் கடந்த 2019-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்காக தேசிய விருதை வென்றார். இந்நிலையில், இமான் கடந்த 2008-ம் ஆண்டு மோனிகா ரிச்சர்டு என்பரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த சில மாதங்களுக்கும் முன்பு தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக இமான் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

வாழ்க்கை நம்மை பல்வேறு பாதைகளில் இட்டுச்செல்லும். அந்த வகையில் எனது மனைவி மோனிகா ரிச்சர்டும் சட்டமுறைப்படி விவாகர்து பெற்றுவிட்டுடோம் இனிமேல் நாங்கள் கணவன் மனைவி இல்லை என்று கூறியிருந்தார். இந்த பதிவு அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது இமான் மறுமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணப்பெண் சென்னையை சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் உமா என்று கூறப்படுகிறது. மேலும் இவர்களுக்கு வரும் மே மாதம் திருமணம் நடக்க உள்ளதாகவும், இந்த திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இமான் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil movie music director d imman marriage update in tamil