“நடிகையர் திலகம்” திரைப்படத்தின் டீசர் இன்று வெளியீடு: நடிகை சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ்

“நடிகையர் திலகம்” படத்தின் டீசர் இன்று வெளியானது. சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளனர்.

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் “நடிகையர் திலகம்”. நாக் அஸ்வின் என்பவர் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் நடிகை சாவித்திரியின் கதாப்பாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜெனிமி கணேசன் கதாப்பாத்திரத்தின் துல்கர் சல்மான் நடித்துள்ளார். இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாப்பாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார்.

நான்கு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது. தமிழில் வெளிவந்த இந்த டீசர், “அவங்க பேரு நடிகையர் திலகம்” என்று சமந்தா குரலில் தொடங்குகிறது. பின்னணியில் சமந்தா குரலில் தொடங்கும் இந்த டீசரில், மக்களைப் பார்த்து கையசைக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

மே மாதம் 9ம் தேதி இத்திரைப்படம் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தற்போது நடைபெற்று வரும் திரையுலகின் போராட்டத்தால் இப்படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

×Close
×Close