நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் படம் இடைவேளை இல்லாமல் வெளியாகும் என்று அறிவிகக்ப்பட்டிருந்த நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் இந்த படத்தை திரையிட மறுத்ததால் தற்போது கனெக்ட் படத்தின் இடைவேளை நேரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பெரும்பாலான மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கிமானது திரைப்படங்கள். தற்போது இன்டர்நெட், ஸ்மார்ட்போன் என தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்திருந்தாலும், தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துதான் இருக்கிறது. அதேபோல் ஃபிலிம்களில் சென்றுகொண்டிருந்த சினிமா இப்போது டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ளது.
ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஃபிலிம் டூ டிஜிட்டல் என அசுர வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும் சினிமாவில் இடைவேளை என்பது சினிமா தோன்றிய காலகட்டத்தில் இருந்து தற்போதைய டிஜிட்டல் சினிமா வரை நடைமுறையில் உள்ளது. இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இடைவேளையை வைத்தே பெரும்பாலான ரசிகர்கள் படத்தின் 2-ம் பாதியை முடிவு செய்கிறார்.
இடைவேளை காட்சியில் ஒரு பெரிய எதிர்பாராத ட்விஸ்ட் அல்லது அடுத்து என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்களை அமர வைக்க இந்த இடைவேளை பெரிய அளவில் உதவுகிறது என்றே சொல்லலாம். ஆனால் தமிழ் சினிமாவில் முதல் படமாக நயன்தாராவின் நடிப்பில் தயாராகியுள் கனெக்ட் படம் 99 நிமிடங்கள் இடைவேளை இல்லாமல் தயாராகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது
ஆனால் இந்த படத்தை திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், தற்போது படத்திற்கு இடைவேளை நேரத்தை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 99 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட இந்த படம் முதல் பாதி 59 நிமிடங்களும், அடுத்த பாதி 40 நிமிடங்கள் கொண்டதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
So the record for a “Non-Interval Film” in Kollywood is still on ! As #Connect team agrees to pause the movie after 1 hour for an interval point.
So #SilambarasanTR bring on your project 😎🔥— KARTHIK DP (@dp_karthik) December 19, 2022
இதனிடையே படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் இது குறித்து கூறுகையில், படத்தில் நன்மை தீமைகள் இருந்தாலும் படத்திற்கு இடைவெளி இல்லாத வாய்ப்பைப் பயளன்படுத்திக்கொள்ள நினைத்தேன். “ஹாலிவுட் படங்களில் இதுபோன்று நாம் பார்த்திருப்போம். படம் தொடங்கி முடியும் வரை இடைவெளை என்பது இருக்காது. அதேபோல் இந்த படத்திற்கு அந்த திறன் உள்ளது, அதனால் இந்த படத்திற்கு ஏன் இடைவேளை வைக்க வேண்டும் என்று நினைத்தேன்.
Doesn't small run time mean more shows can be accommodated. Some movies these days have a 90 min first half and here we are having a 90min film with interval breaks. And also it's sad to know a theatre finances depend on canteen more than tickets #Connect https://t.co/m9HRqZySs8
— Madras Film Screening Club 🎬 (@MadrasFSC) December 20, 2022
சில தயாரிப்பாளர்கள் இடைவேளையின்றி ஒரு படத்தை திரையிட தயங்குவார்கள். ஆனால் நானும் தயாரிப்பாளராக இருப்பதால் எனக்கு சுதந்திரம் இருப்பதால், அதை இடைவேளையின்றி திரையிட முயற்சிப்போம் என்று நினைத்தோம். இது குறித்து நாங்கள் திரையரங்குகளைக் கேட்டோம். ஆனால் அவர்கள் சம்மதிக்கவில்லை.
இந்த படம் அறிவித்தபடி வெளியானால், இடைவெளி இல்லாமல் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையை பெற்றிருக்கும். இது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் இப்போது அது நடக்காமல் போய் விட்டது . தற்போது இந்த முடிவை மாற்றியதால், பலர் ட்விட்டரில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதாக கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.