/tamil-ie/media/media_files/uploads/2020/12/jeya-sasi.jpg)
இயக்குனர் ராம் கோபால் வர்மா என்றாலே சர்ச்சைக்கு பெயர் போனவர். அதிலும் அவர் கடைசியாக இயக்கிய இரண்டு படங்களுமே பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவை மையமாக வைத்து திரைப்படம் எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை வைத்து நிறைய படங்கள் தயாராகி வரும் நிலையில் இந்த தகவல் இணையம் முழுவதும் தீ போன்று பரவி வருகின்றது.
நடிகை ராதிகா சரத் குமார் ஜெயலலிதாக நடிப்பார் எனவும், சூரரை போற்று, மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்களால் இவ்வாண்டு மக்கள் மனம் கவர்ந்த நடிகையான ஊர்வசி சசிகலாவாக நடிப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது. இது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. என்றாலும் இது குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா மவுனம் காக்கிறார்.
இயக்குனர் விஜய் இயக்கியுள்ள 'தலைவி' திரைப்படம் படப்பிடிப்பு நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகிய வருகிறது. இதில் நடிகை கங்கண ரணாவத் ஜெயலலிதாவும், நடிகர் அரவிந்த் சாமி எம். ஜி. ஆர் ஆகவும் நடித்துள்ளனர். அதேபோல் இயக்குனர் பிரியதர்சினி இயக்கி வரும் 'ஐயன் லேடி' எனும் திரைப்படத்தில் நித்தியா மேனன் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாந்த் முருகேசன் இணைந்து 'குயின்' எனும் வெப்- சீரிஸ்யை இயக்கி இருந்தனர். இதில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவக நடித்திருந்தார். இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறா விட்டதாலும் நிறைய விமர்சனங்ககளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.