அஜித் பட நடிகை மறுமணமா? திடீர் சர்ச்சை

Tamil Movie News: மகளோ, குடும்பத்தினரோ 2-வது திருமணம் செய்து கொள்ளும்படி என்னை கட்டாயப்படுத்தவும் இல்லை.

விஸ்வாசம் பட நடிகைக்கு மறுமணம் என கிளம்பிய தகவல் திரை வட்டாரத்தை பரபரப்பாக்கியது. இது குறித்து சம்பத்தப்பட்ட நடிகையே விளக்கம் அளித்திருக்கிறார். ஒரே வாரத்தில் அந்த நடிகை சிக்கிய 2-வது சர்ச்சை இது.

பிரபல நடிகை சுரேகா வாணி. இவர் தமிழில் உத்தமபுத்திரன், தெய்வத்திருமகள், ஜில்லா, பிரம்மா, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

அண்மையில் விஜய்யின் சிறந்த ஆக்‌ஷன் படங்களை எனக்கு தெரிவியுங்கள் என்று சமூக வலைத்தளத்தில் பதிவை வெளியிட்டார். அது விஜய், அஜித் ரசிகர்கள் இடையே மோதலாக வெடித்தது. இதனால் மீடியாவில் சுரேகா வாணி அடிபட்டார்.

43 வயதான சுரேகா வாணியின் கணவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது சுரேகா வாணி மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது. இந்த திருமணத்துக்கு அவரது மகள் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

இதற்கு சுரேகா வாணி அளித்த விளக்கத்தில், ‘நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அப்படி எந்த திட்டமும் இல்லை. மகளோ, குடும்பத்தினரோ 2-வது திருமணம் செய்து கொள்ளும்படி என்னை கட்டாயப்படுத்தவும் இல்லை. இப்போது எனது சினிமா வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்.’ என்றார்.

இதனால் ஒரே வாரத்தில் சுரேகா வாணி 2-வது சர்ச்சையில் சிக்கி மீண்டிருக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil movie news in tamil viswasam movie actress surekha vani controversy

Next Story
பாகுபலி பிரச்சனை… நடிகனாக இருப்பது குற்றமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express