Tamil Movie News, Rajinikanth News: சிறுத்தை, வீரம், விஸ்வாசம் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சிவா. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து அண்ணாத்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். அவர் இயக்கிய திரைப்படங்களில் இருந்து இந்த படம் வித்தியமான கதை களம் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகின்றது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. அப்போது படக்குழுவில் நான்கு பேருக்கு கொரோனா (கோவிட் – 19) இருப்பதாக அறியப்பட்டது. எனவே படப்பிடிப்பை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த திடீர் படப்பிடிப்பு நிறுத்தம் ரஜினி அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிடவே என பரவலாக பேசப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பில் இருந்து ரஜினி பின் வாங்கிவிட்டார்.
இந்நிலையில் படத்தின் 75 சதவிகித படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு பிப்ரவரி மாதம் முதல் அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் துவங்க உள்ளது. ரஜினியும் படத்தை விரைந்து முடித்து கொடுக்க ஆர்வம் காட்டி வருவதாகவும், ப்ளாக்பஸ்டர் படமாக அமையும் எனவும் கூறியுள்ளனர்.
இரத்த அழுத்தம் குறைவு காரணமாக கடந்த வாரம் அப்போலோமருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமத்திக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்தனர் . ரஜினிகாந்த் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் ஞாயிற்று கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்