Advertisment

50-வது நாளை தொட்ட பொன்னியின் செல்வன் : 500 கோடியை கடந்த மொத்த வசூல்

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கிய படம் பொன்னியின் செல்வன்.

author-image
WebDesk
Nov 18, 2022 19:46 IST
50-வது நாளை தொட்ட பொன்னியின் செல்வன் : 500 கோடியை கடந்த மொத்த வசூல்

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண பொருட்செலவில் தயாராகி கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் 50-வது நாளை கடந்துள்ள நிலையில், உலகளவில் இந்த படம் 500 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்க்பபட்டுள்ளது.

Advertisment

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கிய படம் பொன்னியின் செல்வன். 2 பாகங்களாக தயாராகியுள்ள இந்த படத்தின் முதல்பாகம் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வெளியானது. தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி மலையாளம் உள்ளிட் மொழிகளில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். லைகா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. தற்போது பொன்னியின் செல்வன் படம் வெளியாகி 50 நாளை கடந்துள்ள நிலையில், உலகளவில் பொன்னியின் செல்வன் இதுவரை 500 கோடி வசூலித்துள்ளதாக  தயாரிப்பாளர்கள் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் ஆகியவை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளன.

இந்த அறிவிப்பை பகிர்ந்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்த  “யாராவது என்னைக் கிள்ளுங்கள்.. இது கனவு அல்ல என்று சொல்லுங்கள் என்று பதிவிட்டு்ளளார். பொன்னியின் செல்வன் படம் வெளியான 12 நாட்களில் ரூ 400 கோடியை தாண்டியது. ஆனால், இரண்டாவது வாரத்தில் வசூல் குறையத் தொடங்கியது.

இதனால் மூன்றாவது வாரத்தில் ரூ.450 கோடி வசூலை எட்டிய இப்படம், கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு தற்போது ரூ.500 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது. நடப்பு ஆண்டில் வெளியான பான்-இந்திய படங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் பெரிய வெற்றிப்படங்களின் வரிசையில் இணைந்துள்ளது. பொன்னியின் செல்வனுக்கு முன், ஆர்ஆர்ஆர், கே.ஜி.எஃப் 2 போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வசூல் சாதனை செய்தது.

இதனிடையே உலகளவில் 500 கோடி வசூலித்திருந்தாலும் இந்தியில் பொன்னியின் செல்வன் வசூல் அவ்வளவாக இல்லை. பாலிவுட் ஹங்காமா படி, ஹிந்தி பதிப்பின் வசூல் 25.12 கோடி என்று அறிவிக்கப்டடுள்ளது. மேலும் படம் சமீபத்தில் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகியிருந்தாலும்,  படத்தைப் பார்க்க பலர் தியேட்டர்களுக்குச் சென்று வருவது தொடர்ந்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Vikram #Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment