Tamil Movie Ponniyin Selvan Actress Trisha Latest Clicks Viral பொன்னியின் செல்வன் ப்ரமோஷன்... குந்தவையின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் பார்த்தீங்களா? | Indian Express Tamil

பொன்னியின் செல்வன் ப்ரமோஷன்… குந்தவையின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் பார்த்தீங்களா?

பொன்னியின் செல்வன் படத்தில் தனது கேரக்டரை பிரபலப்படுத்தும் நோக்கில் நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் குந்தவை என்று பெயர் மாற்றியுள்ளார்.

பொன்னியின் செல்வன் ப்ரமோஷன்… குந்தவையின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் பார்த்தீங்களா?

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மணிரத்னம் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன்.

வரலாற்று பதிவுகளை பற்றி பேசும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்தீபன், விக்ரம் பிரபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தில் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே பொன்னியின் செல்வன் படம் வரும் செப்டம்பர் 30-ந் தேதி வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக த்ரிஷா இந்த படத்தில் குந்தவை என்ற முக்கிய கேரக்டரில் ஆதித்ய கரிகாலனின் தங்கை கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் நடிகர் நடிகைகள் தீவிரமாக ஈடுபாட்டு வரும் நிலையில், தங்களது சமூக வலைதளங்களிலும் ப்ரமோஷன் பணிகளை தொடர்ந்து வருகின்றனர்.

இதில் பொன்னியின் செல்வன் படத்தில் தனது கேரக்டரை பிரபலப்படுத்தும் நோக்கில் நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் குந்தவை என்று பெயர் மாற்றினார். இந்த மாற்றம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் த்ரிஷா பொன்னியின் செல்வன் ப்ரமோஷனோடு சேர்த்து தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த படங்கள் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டிருக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil movie ponniyin selvan actress trisha latest clicks viral