Advertisment

ஒன்றாக வெளியாகும் ஜோதிகா-நயன்தாரா படங்கள்!

Tamil Movie Release: இவற்றுடன் ‘தொரட்டி’, ’ஐஆர்8’, ‘மயூரான்’ ஆகியப் படங்களும் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகின்றன. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jyothika Nayanthara - jackpot kolaiyuthirkaalam release

ஜோதிகா - நயன்தாரா

சமீபமாக தமிழ் நடிகைகள் அனைவரும் தங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடிப்பதை அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அப்படி ஹீரோயினை மையப்படுத்திய இரண்டு படங்கள் இந்த வாரம் வெளியாகின்றன. அதாவது நடிகை ஜோதிகாவின் ’ஜாக்பாட்’, நயன்தாராவின் ’கொலையுதிர்காலம்’ ஆகிய 2 படங்களும் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகின்றன.

Advertisment

‘குலேபகாவலி’, ‘காத்தாடி’ ஆகியப் படங்களை இயக்கிய கல்யாண், தற்போது நடிகை ஜோதிகாவை வைத்து ‘ஜாக்பாட்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். ரேவதி, யோகிபாபு, ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்தும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் ஜோதிகா. சமீபத்தில் இவர் நடிப்பில் ‘ராட்சசி’ படம் வெளியாகி, அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் சக்ரி டோலேட்டியின் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘கொலையுதிர் காலம்’. இந்தப் படமும் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகிறது. இதைத் தவிர, கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் ‘கழுகு 2’ திரைப்படம் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாகிறது.

இவற்றுடன் ‘தொரட்டி’, ’ஐஆர்8’, ‘மயூரான்’ ஆகியப் படங்களும் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகின்றன.

Nayanthara Jyothika
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment