பொதுவாக ஒரு திரைப்படம் வெளியான ஒரு வருடம் அல்லது பல மாதங்கள் கழித்து டிவியில் ஒளிபரபப்பாகும். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் திரைப்படங்கள் வெளியாவதும் அதிகரித்து வருகிறது. அதே சமயம் வெளியான திரைப்படங்கள் ஓரிரு வாரங்களில் ஒடிடி தளங்களில் வெளியிடப்படுகிறது.
இந்த வகையில் தற்போது 2023-ம் ஆண்டு 3 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், இதுவரை வாரிசு, துணிவு, மற்றும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியான பத்து தல, விடுதலை ஆகிய படங்கள் மட்டுமே பெரிய படங்களாக அமைந்துள்ளது. இந்த படங்களில் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள விடுதலை படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மற்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்துள்ளன. அதேபோல் எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியாகி விமர்சனரீதியாக வரவேற்பை பெற்ற படம் அயோத்தி. திரையரங்கில் வெளியான படங்கள் ஒரு மாதத்தில் ஒடிடி தளத்தில் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் ஒடிடி தளத்தில் வெளியான படங்கள் குறித்து பார்ப்போம்.
பஹீரா
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ஒரு சைக்காலஜிக்கல் காதல் திரில்லர் படமாக பஹீராவில், பிரபுதேவா, அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி, காயத்ரி, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கணேசன் இசையமைத்துள்ள இந்தப் படம் மார்ச் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நேற்று ஒடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.
அறியவன்
மித்ரன் ஜவஹரின் அசோசியேட் இயக்கிய இந்தப் படத்தில் இஷாவுன் மற்றும் பிரனாலி கோகரே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அதிரடி ஆக்ஷன் படமாக வெளியான இந்த படம் படம் டிஜிட்டல் பிரீமியர் நேற்று வெளியிடப்பட்டது.
அயோத்தி
ஆர் மந்திர மூர்த்தி இயக்கத்தில், சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி, புகழ் மற்றும் சேத்தன் ஆகியோர் நடித்துள்ள ஒரு சிறந்த படம் என்ற விமர்சனத்தை பெற்றது ‘அயோத்தி’. இப்படம் மார்ச் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் டிஜிட்டல் பிரீமியர் நேற்று வெளியானது.
அகிலன்
கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‘அகிலன்’. இந்தப் படம் ஒரு போலீஸ் கேங்ஸ்டர் இடையே நடக்கும் மோதல் தான் கதை. ஜெயம் ரவி இந்தியப் பெருங்கடலைக் கட்டுப்படுத்தும் கேஸ்டர் வேடத்தில் நடித்துள்ளார். ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில், தன்யா ரவிச்சந்திரன் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிஜிட்டல் பிரீமியர் நேற்று வெளியானது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“