வசூல் வேட்டையில் சர்தார்... இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் கார்த்தி
சர்தார் படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி மற்றும் பி.எஸ்.மித்ரன் இருவரும் மீண்டும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைய உள்ளதாக சர்தார் படத்தின் வெற்றி சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
சர்தார் படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி மற்றும் பி.எஸ்.மித்ரன் இருவரும் மீண்டும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைய உள்ளதாக சர்தார் படத்தின் வெற்றி சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
சர்தார் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் கார்த்தி மற்றும் தயாரிப்பாயர் லக்ஷ்மண் ஆகியோர் இணைந்து படத்தின் இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளனர்.
Advertisment
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 21-ந் தேதி வெளியான படம் சர்தார். கார்த்தி, ராஷிசா விஜயன், லைலா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். தண்ணீர் அரசியலை மைப்படுத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த சர்தார் தற்போது வசூலில் சாதனை படைத்து வருகிறது.
தற்போதுவரை சர்தார் படம் சுமார் ரூ.85 கோடி (உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் வசூல்) வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விரைவில் ரூ.100 கோடி கிளப்பில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்தார் படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி மற்றும் பி.எஸ்.மித்ரன் இருவரும் மீண்டும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைய உள்ளதாக சர்தார் படத்தின் வெற்றி சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
Advertisment
Advertisements
நாட்டை காப்பாற்றி முடியாமல் தேச துரோகி என்று பழியை சுமந்துகொண்டிருக்கும் ரகசிய உளவாளி தனது கலங்கத்தை எவ்வாறு துடைத்தார், இதில் அவரது மகனின் பஙகு என்ற என்பதை சர்தார் படம் விவரிக்கிறது. ஏற்கனவே விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இதனிடையே தற்போது சர்தார் அவருக்கு மற்றொரு வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் சர்தார் படத்தின் நாயகன் கார்த்தி மற்றும் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் ஆகியோர் சர்தார் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், இயக்குனர் பி.எஸ்.மித்ரனுக்கு டொயோட்டா ஃபார்ச்சூனரை பரிசளித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“