Advertisment

திமுக குஷி; அதிமுக கடுப்பு: சார்பட்டா பரம்பரைக்கு ஜெயக்குமார், உதயநிதி ரியாக்ஷன்ஸ்

Tamil Movie Update : ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான சார்பட்டா படம் குறித்து திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்து்ளளனர்.

author-image
WebDesk
New Update
திமுக குஷி; அதிமுக கடுப்பு: சார்பட்டா பரம்பரைக்கு ஜெயக்குமார், உதயநிதி ரியாக்ஷன்ஸ்

Sarpatta Parambari Movie Comments : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் குறித்து திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இருவரும் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளனர்.

Advertisment

அட்டக்கத்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பா.ரஞ்சித் தொடர்ந்து கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கி பிரபலமானார். இந்த இரு படங்களும் பா.ரஞ்சித்துக்கு வெற்றிப்படங்களாக அமைந்த்தை தொடர்ந்து அடுத்து முன்னணி நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் கபாலி காலா என்ற இரு படங்களை கொடுத்தார். ஆனால் இந்த இரு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதில் ரஞ்சித் இயக்கிய காலா (2018) படம் வெளியாகி  3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு அவர் தற்போது இயக்கியுள்ள படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் பசுபதி, துஷாரா விஜயன், கலையரசன், அனுபமா குமார், ஜான்விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த ஜூலை 22-ந் தேதி ஒடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் முதல் இரண்டு படங்களை புதுமுக நடிகர்களை வைத்து (மெட்ராஸ் கார்த்தியை தவிர்த்து) நேர்த்தியாக கொடுத்த பா.ரஞ்சித் இடையில் ரஜினியை வைத்து இயக்கிய இரண்டு படங்களையும் நாயகனுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக எடுத்துள்ளார். ஆனால் தற்போது அதில் இருந்து விலகி தனக்கே உரிய பாணியில் சிறந்த படத்தை கொடுத்துள்ளார் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இந்த படம் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள ’சார்பட்டா பரம்பரை' முக்கியமான திரைப்படம். அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகம் - கலைஞர் - கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது என்று கூறி படத்தில் பணிபுரிந்த அணைவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கு எதிர்மறையாக கருத்து தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தனது ட்விட்டர் பதிவில், 30 ஆண்டுகால நல்லாட்சியையே திட்டமிட்டு மறைத்துள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித் சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில், புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கும் விளையாட்டுத்துறைக்கும் தொடர்பே இல்லை என்பது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளன. இத்திரைப்படம் திமுகவின் பிரச்சாரப்படமாகவே உள்ளது என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவில் அவர் பாக்ஸிங் செய்யும் வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

ஆனால் இந்த படம் குறித்து அரசியல் ரீதியாக நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துக்கள் வெளிவந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் பெரும் கவனம் ஈர்த்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Udhayanidhi Stalin Tamil News Minister Jayakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment