Advertisment

வாரே வா..! சீயானுடன் சன் டிவி சீரியல் நடிகை ரொமான்ஸ்

Chiyaan Vikram VS Dhruv Vikram : விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரமுடன் இணையும் புதிய படத்தில் சீரியல் நடிகை வாணி போஜன் இணைந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
வாரே வா..! சீயானுடன் சன் டிவி சீரியல் நடிகை ரொமான்ஸ்

Chiyaan Vikram 60th Movie Update : தமிழ் சினிமாவில முன்னணி நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம். சினிமா பின்புலம் இல்லாமல் சினிமாவிற்கு வந்த இவர் தொடக்கத்தில் பல தோல்வி படங்களை கொடுத்து ராசியில்லாத நடிகர் என பெயரெடுத்தார்.  இதன் காரணமாக திறமை இருந்தும் புறக்கணிக்கப்பட்ட விக்ரமை வைத்து இயக்குநர் பாலா கடந்த 1999-ம் ஆண்டு தனது முதல் படமாக இயக்கிய சேது பெரும் வெற்றி பெற்று விக்ரமின் பல நாள் உழைப்பிற்கு பெருமை சேர்த்தது.

Advertisment

தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விக்ரம், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், கோப்ரா, கவுதம் மேனன் இயக்கத்தில் துருவா நட்சத்திரம், ஆர்.எஸ். விமல் இயக்கத்தில், மகாவீர் கர்ணன், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என மாறி மாறி நடித்து வருகிறார். இது ஒருபுறம் இருக்க மறுபுறம், தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் முதல் முறையாக விக்ரம் தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கிறார். தற்போது இந்த படத்திற்கு சியான் 60 என்று பெயரிடப்பட்டுள்ளது.

தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தில் தமிழ் ரீமேக்காக வெளியாக ஆதித்யா வர்மா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் துருவ் விக்ரம், அதன்பிறகு யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த படத்திற்காக பல இயக்குநர்கள் பெயர் அடிப்பட்ட நிலையில், தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். கடந்த சில மாதங்களாக தீவிர ஆலோசனைக்கு பிறகு இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

தந்தை மகன் இணையும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இப்போதோ எதிர்பார்ப்பு கூடியுள்ளது. மேலும் விக்ரமின் 60-வது படமாக உருவாக்கும் இந்த படத்திற்கு விக்ரம் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ள நிலையில், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க உள்ளது.

சன்டிவியில் ஒளிபரப்பாகி மக்களிடம் அதிக வரவேற்பை பெற்ற தெய்வமகள் சீரியலில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்த வாணி போஜன் தற்போது இந்த படத்தில் முக்கிய பெண் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 3 முதல் டார்ஜிலிங்கில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Vikram Vs Dhruv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment