scorecardresearch

Don Movie Review : கமர்ஷியல் காக்டெயில் ‘டான்’

Sivakarthikeyan’s ‘DON” Movie Launched Today LIVE Updates : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.. சிபிசக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

Don Movie Review : கமர்ஷியல் காக்டெயில் ‘டான்’
'DON' Movie Review Live News, 'DON" Film Launched Today LIVE Updates

திராவிட ஜீவா

Sivakarthikeyan plays the role of a college student in the film, After the successful ‘Doctor’, Priyanka Mohan has again paired up with Sivakarthikeyan : டான் படத்தின் மூலம் காமெடி, ஆக்க்ஷன்,சென்டிமென்ட் கலந்த எம்ஜிஆர், ரஜினி வரிசையில் கமல்,பாக்யராஜ், பிரபுவுக்குப்பிறகு தமிழ் சினிமாவில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தார் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.. சிபிசக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் தயாரித்துளளது. ரஜினிபடத்துக்கு பிறகு டான் படத்தை மிகப்பெரிய விலைக்கு வாங்கிய உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் இந்த படத்தை இன்று வெளியிட்டுள்ளது.

சிறு வயதிலிருந்தே படிப்பில் நாட்டமில்லாமல் தொடர்ந்து பாடங்களில் தோல்வியடைந்தவர் தந்தையின் கண்டிப்பில் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு சென்று அங்கே ஸ்ட்ரிக்ட்டான கல்லூரி முதல்வரிடம் மாட்டிக்கொள்ளும் சிவகார்த்திகேயன் ஒழுங்காக படித்து முடித்தாரா? தந்தையின் கனவை நிறைவேற்றினாரா?  ஸ்கூல் முதல் காலேஜ் வரை தொடரும் காதலி பிரியங்கா மோகனுடன் சேர்ந்தாரா? என்னும் ஒன்லைனை வைத்துக்கொண்டு கதகளி ஆடியிருக்கின்றார் இயக்குனர் சிபிச்சக்ரவர்த்தி.

ரஜினிக்கேற்ற கமர்ஷியல் இயக்குனர் அப்படியே ரஜினி ரசிகன் சிவகார்த்திகேயனுக்கும் பொருந்தியிருக்கின்றார் என்பதைவிட வரலாறு படைத்திருக்கின்றார் என்றே பாராட்டவேண்டியுள்ளது. டீம் ஒர்க் என்னும் வார்த்தைகளுக்கு சிவகார்த்திகேயன் சிபிசக்ரவர்த்தி கூட்டணி உறுதிசெய்திருக்கிறது  தன்னை ஒரு ரஜினி ரசிகராக நடிகர்கள் சொல்லிக்கொண்டு சினிமாவில் அடையாளம் தேடிக்கொண்டதை போல் இல்லாமல் உண்மையான இளம் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தபின்பும் அதேநிலையில் தொடர்வது படத்தில் தெரிகின்றது அந்த அளவுக்கு ரஜினி ரெஃபரன்ஸ் காட்சிகள் படத்தில் பளிச்சிடுகின்றது.

பாடத்தில் தோல்விடைந்தால் தந்தைக்கு மொட்டை அடித்துவிடும்  காட்சியாக இருக்கட்டும் இடைவேளையில் கல்லூரியில் தந்தைக்கு பதில் ஆள்மாறாட்டம் செய்து மாட்டிக்கொள்ளும் இடம் காதலியிடம் அடிவாங்கு இடம் காமெடியில் நான் சயின்ட்டிஸ்ட் ஆயிடட்டுமா என்கிற இடம் என அனைத்து இடத்திலும் ரவுண்டு கட்டி அடிக்கும் ரஜினியின் 80 களின் நெஞ்சில் நிற்கும் கமர்ஷியல் படங்களை அப்படியே நினைவில் நிறுத்துகின்றது டான். ரஜினிக்கு வயதாகிவிட்டதை சிவகார்த்திகேயன் தான் நினைவுபடுத்தி தமிழ் சினிமாவின் பொற்காலத்தை மீட்டெடுக்கின்றார் என்பதை உணர்வுகளின் மூலமே உறுதிசெய்ய முடியும்.

இமான் அனிருத் என யார் இசையமைத்தாலும் சிவகார்த்திகேயனுக்கு மட்டும் காதல் பாடல்களும் செட்டாவது அவரின் ஸ்பெஷல் போல  ஜலபுலஜங் பாடல் புரொபஷனல் டான்ஸ் நடிகர்களுக்கான சவால் வழக்கமாக காமெடிக்கு துணைநிற்கும் சூரிக்கு இதில் வித்தியாசமான கதாபாத்திரம் சமீபமாக வில்லனாக புது அவதாரம் எடுத்திருக்கும் எஸ்.ஜே.சூர்யாவும் தனது ட்ரேட்மார்க் ஸ்டைலை கச்சிதமாக செய்துள்ளார்.

போட்டோகிராஃபி நெஞ்சைவிட்டு அகலவில்லை கலை இயக்குநரின் நயமும் பாடல்காட்சிகளில் பக்கா பொருத்தம் என்று இப்படி ஒட்டுமொத்தமாக ஒரு டீம் வெற்றியை மட்டுமே கொடுக்க வேண்டும் என்று களத்தில் இறங்கி உழைத்திருப்பதை படம் உறுதிப்படுத்துகிறது.

வரலாற்று சிறப்புமிக்க இண்டஸ்ட்ரி ஹிட்டை தமிழ் சினிமாவில் சற்றேக்குறைந்துள்ள நிலையில், டான் படம் விவாதிக்கவே முடியாத வெற்றி. தமிழ் சினிமாவின் டான் இவர்தான் என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil movie sivakarthikeyans don movie launched today