sivappu manjal pachai, tamilrockers, சிவப்பு மஞ்சள் பச்சை படத்தை, தமிழ் ராக்கர்ஸ்
TamilRockers Leaked Sivappu Manjal Pachai Tamil Movie: சிவப்பு மஞ்சள் பச்சை படத்தை தியேட்டரில் ரிலீஸான சூட்டோடு தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது. இதனால் படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
Advertisment
சிவப்பு மஞ்சள் பச்சை: படத்தின் தலைப்பிலேயே கதை இருக்கிறது. ஆம், மேற்படி 3 நிறங்களும் போக்குவரத்து சிக்னலுக்கானவை! இதுவரை யாரும் தொடாத ஒரு கதையாக போக்குவரத்துக் காவலர்களின் அவஸ்தையை வெள்ளித் திரைக்கு கொண்டு வந்திருக்கிறது இந்தப் படம். கூடவே, ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸுடன்!
நடிகர் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் இணைந்து இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். சித்தார்த் போக்குவரத்து போலீஸாக நடித்துள்ளார். பிச்சைக்காரன் படத்தை இயக்கிய சசி, இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். சித்தார்த்தும் ‘அவள்’ படத்திற்கு பிறகு இரண்டு ஆண்டு இடைவெளி எடுத்துக்கொண்டு தமிழில் நடித்திருக்கிறார்.
போக்குவரத்து போலீசார் காலை முதல் இரவு வரை வாகனங்கள் விடும் நச்சுப் புகைகளை சகித்துக்கொண்டு படும் அவஸ்தைகளை வாகன ஓட்டிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இதில் பைக் ரேஸ் இளைஞராக நடித்திருக்கிறார். இவர்களுக்கு ஜோடியாக தீபா ராமானுஜம், காஷ்மிரா பர்தேஷி, லிஜோமோல் ஜோஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை தியேட்டரில் போய் பார்த்து ஆதரவு கொடுங்கள் என்று சித்தார்த்தும் ஜிவி பிரகாஷும் ட்விட்டரில் வீடியோ மூலமாக கேட்டுக் கொண்டனர். படம் நேற்று (செப்டம்பர் 6) வெளியானது. ஆனால் படம் ரிலீஸான அன்றே இந்தப் படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிட்டது.
புதிய படங்களைஅடுத்தடுத்து தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டு வருவது வாடிக்கைதான் என்றாலும், இதுபோல மிகுந்த சிரமங்களுக்கு இடையில் நல்ல மெசேஜ் சொல்வதற்காக எடுக்கப்படும் படங்களும் தமிழ் ராக்கர்ஸின் வேட்டையில் சிக்கி சின்னாபின்னமாவது வேதனைதான். இதையும் மீறி ரசிகர்கள் நினைத்தால், நல்ல படங்களை ஊக்கப்படுத்த முடியும்.