Advertisment

ரீல் ஜெயலலிதா மக்களை கவர்ந்தாரா? தலைவி விமா்சனம்

Tamil Cinema Update : ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறு முழுமையாக சொல்லப்பட்டதா என்றால் இல்லை என்றுதான் பலரும் சொல்வார்கள்

author-image
WebDesk
New Update
ரீல் ஜெயலலிதா மக்களை கவர்ந்தாரா? தலைவி விமா்சனம்

Thalaivi Movie Review : தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு என்ற விளம்பரத்தோடு இன்று வெளியாகியள்ள படம் தலைவி.

Advertisment

இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி, நாசர், சமுத்திரக்கனி, தம்பிராமையா மதுபாலா, பூர்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் 1965 ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட ஜெயலலிதாவின் வாழ்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த காலகட்டத்தில் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறு முழுமையாக சொல்லப்பட்டதா என்றால் இல்லை என்றுதான் பலரும் சொல்வார்கள். அந்த அளவிற்கு படத்தின் பல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.  

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக இருந்து எம்.ஜி.ஆருடன் தனது 16 வயதில் ஜோடியாக நடிக்க தொடங்கிய ஜெயலலிதா தொடர்ந்து பல படங்களில் அவருடன் இணைந்து நடித்து முன்னணி நாயகியாக வலம் வருகிறார். இந்த காலகட்டத்தில் ஜெயலலிதா எம்ஜிஆருடன் காதல் வயப்படுகிறார். முதலில் இந்த காதலை ஏற்க மறுக்கும் எம்ஜிஆர் ஒரு கட்டத்திற்கு பிறகு ஏற்றுக்கொள்கிறார். அப்போது தான் இருக்கும் கட்சியில் மனக்கசப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கிருந்து விலகி புதிய கட்சி தொடங்குகிறார்.

இதனால் ஜெயல்லிதாவுடனான காதலை முறித்கொண்டதோடு மட்டுமல்லாமல் சினிமாவில இருந்தும் விலகிகொள்கிறார். அதன்பிறகு ஜெயலலிதாவிற்கு படவாய்ப்பு குறைகிறது. இதற்கிடையே முதல்வராகும் எம்ஜிஆர் நடன நிகழ்ச்சி ஒன்றில் ஜெயலலிதாவை சந்தித்து தனது கட்சிக்குள் அழைத்து வருகிறார். அதன்பின்னர் கட்சியில் வளரும் அவர், எம்பியாக வெற்றி பெறுகிறார். ஒரு கட்டகத்தில் திடீரென கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார். அதன்பிறகு அரசியிலில் இருந்து விலகுகிறார்.

இதற்கிடையே எம்ஜிஆர் மரணமடைந்த நிலையில், அவருடைய கட்சியினர் ஜெயலலிதாவின் பின்னால் செல்கின்றனர். அதன்பிறகு கட்சியை முழுமையாக கைப்பற்றும் ஜெயல்லிதா தேர்தலில் வெற்றி பெற்று எதிர்கட்சி தலைவராக சட்டசபைக்கு செல்கிறார். அப்போது சட்டசபையில் அவர் ஆளும் கட்சியினால் மானபங்கப்படுத்தப்படுகிறார். இதனால் வெகுண்டெழும் அவர், இனி முதல்வராகத்தான் சட்டசபையில் அடியெடுத்து வைப்பேன் என்று சபதமிட்டு செல்கிறார். இந்த சபதத்தில் வெற்றி பெற்றாரா? இதற்கான அவர் என்னவெல்லாம் செய்தார் என்பதே மீதிக்கதை.

இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிரக கங்கனா ரனாவத் சிறப்பான நடிப்பை வெளியிப்படுத்தியுள்ளார். நடிப்பு, காதல், அவமானம் சோகம், என பல பாவனைகளில் தனது நடிப்புத்திறமையை வெளிகாட்டியுள்ளார். எம்ஜிஆராக அரவிந்தசாமி அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சில இடங்களில் இவரது நடிப்பு செயற்கையாக தெரிந்தாலும், எம்ஜிஆரை திரையில் கெண்டுவர தன்னால் முடிந்த வரை கடுமையா உழைத்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் சாவல் விடும் அளவுக்கு ஆர்.என. வீரப்பனாக வரும் சமுத்திரக்கனி தனக்கே உரிய பாணியில் அசால்டாக அடித்துநொருக்கியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். தனது கதாப்பாத்திரம் என்ன என்பதை முதல் காட்சிலேயே ரசிகர்கள் மனதில் பதியவைக்கிறார். அதன்பிறகு ஜெவின் அரசியல் எதிராக வரும் நாசர், உதவியாளாக வரும் தம்பி ராமையா, சசியாக வரும் பூர்ணா, ஜானகியாக வரும் மதுபாலா ஆகியோர் குறைந்த காட்சிகளே வந்தாலும் மனதில் நின்றுவிடுகின்றனர்.

இவர்களை தவிர்த்து படத்தில் அதிகம் பேசப்படுபவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். பின்னணி இசையில் தனது பலத்தை நிரூபித்துள்ள .ஜிவி பாடல்களில் கோட்டைவிட்டுவிட்டார் எனறுதான் சொல்லவேண்டும். அதிலும ஜெ. அறிமுகப்பாடல் இந்தி பாடல் கேட்பது போன்ற உணர்வை கொடுப்பது மறுப்பதற்கில்லை. படத்தில் மதன் கார்கியின் வசனம் சில இடங்கில் கைத்தட்டல் பெறுகிறது.

ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறு என்று விளம்பரப்படுத்தப்பட்ட இந்த படம் அவருடைய வாழ்கையை முழுமையாக எதிரொலிக்கும் படமாக அமைந்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சர்ச்சைகள் அதிகம் உள்ள ஜெவின் வாழ்கையில் அவரின் சிக்கல் இல்லாத சில சம்வபங்களை மட்டுமே வைத்துகொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டரை மணி நேரம் ஓடும் இந்த படத்தில் முதல் பாதிவரை எம்ஜிஆர் ஜெவின் காதல் காட்சிகளே அரங்கேறியுள்ளது. இதனால் ஒருகட்டத்தில் பார்வையாளர்களுக்கு சலிப்பு தட்டுகிறது.

மேலும் இந்த படத்தில் இயக்குநர் ஏ.எல்.விஜய் வரலாற்றை தவறாக சித்தரித்து விட்டதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. 1989-ம் ஆண்டு சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா அப்போதைய முதல்வர் கருணாநிதியை நிதி நிலை அறிக்கையை படிக்க விடாமல் தகராறு செய்தார். அதன்பின்னர் கருணாநிதி கையில் இருந்து பிடுக்கப்பட்டு நிதிநிலை அறிக்கை கிழிக்கப்படுகிறது. இதனால் சட்டசபையில் கலவரம் வெடித்தபோது, தன்னை மானபங்கப்படுத்திவிட்டதாகவும், இனிமேல் முதல்ராகத்தான் சட்டசபைக்கு திரும்புவேன் என்று கூறியது வரலாறு. ஆனால் இந்த படத்தின் தொடக்கத்தில் வரும் சட்டசபை காட்சியில், ஜெயல்லிதாவிடம் எம்ஜிஆருக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என்று கேட்கப்படுகிறது. அதற்கு பதில் சொல்ல முற்படும்போது ஜெயலலிதாவை கன்னத்தில் அறையும் எதிர்கட்சி எம்எல்ஏ அவரது சேலையை இழுத்து மானபங்கப்படுத்துகிறார்.

அதன்பிறகு சபதம் எடுக்கும் ஜெயலலிதா இனி முதல்வராகத்தான் சட்டசபைக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார். 33 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வரலாற்றையே இயக்குநர் ஏ.எல். விஜய் மாற்றிவிட்டதாவும், முழுக்க முழுக்க ஜெயல்லிதாவின் நேர்மறையான செயல்களை மட்டுமே காண்பிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்த படத்தில் எம்.ஜி.ஆர். உட்பட அனைவருமே ஜெயல்லிதாவிற்கு எதிரிகளாகவே சித்தரிக்கப்பட்டள்ளது என்ற கருத்தும் நிலவி வருகிறது.

எது எப்படி இருந்தாலும், முதல்வர் ஜெயலலிதாவை மனதில் வைக்காமல் ஒரு சாதாரண பெண் நடிகையாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்து முதல்வர் அரியணையில் அமர்கிறார் என்ற கருத்தை மனதில் வைத்து படம் பார்த்தால் இந்த படம் நிச்சயம் உங்களை திருப்திப்படுத்தும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cinema Update Thalaivi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment