scorecardresearch

நீங்கள் கேட்டது உடனுக்குடன்… மேலும் ஒரு தளபதி 67 அப்டேட் கொடுத்த படக்குழு

தளபதி 67 படம் லோகேஷ் யூனிவர்ஸ்க்குள் வருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது

நீங்கள் கேட்டது உடனுக்குடன்… மேலும் ஒரு தளபதி 67 அப்டேட் கொடுத்த படக்குழு

தளபதி 67 படம் தொடர்பான அப்டேட்கள் இணையத்தில் படு வைரலாக பரவி வரும் நிலையில், தற்போது படக்கு காஷ்மீர் சென்ற வீடியோ தொகுப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.  

வாரிசு படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக தளபதி 67 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், த்ரிஷா நாயகியாக நடிக்க உள்ளார். மேலும் அர்ஜூன், மிஷ்கின், சஞ்சய் தத், கவுதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர்.

செவன் ஸ்கிரீன் டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். கடந்த டிசம்பர் மாத இறுதியில் தளபதி 67 படத்திற்கான பூஜை தொடங்கப்பட்டது. அப்போது வாரிசு படம் வெளியாகும் நிலையில், இருந்ததால் தளபதி 67 குறித்து எவ்வித அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை. தற்போது வாரிசு படம் வெளியாகிவிட்ட நிலையில், கடந்த சில தினங்களாக தளபதி 67 குறித்து அப்டேட்கள் வெளியாகி வருகிறது.

இதில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு அதனைத் தொடர்ந்து படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பட்டியலை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. மேலும் இன்று மாலை தளபதி 67 படத்தில் டைட்டில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது படக்குழு படப்பிடிப்பிற்காக காஷ்மீர் சென்ற வீடியோ காட்சியை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ஏற்கனவே வெளியான மாஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்த நிலையில், தளபதி 67 படத்திற்கு பெரிய எதிர்பார்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேடு மட்டுமல்லாமல் லோகேஷ் கடைசியாக கமல்ஹாசனை வைத்து இயக்கிய விக்ரம் படம் பெரிய வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தில் கைதி படத்தின் ரெப்ரன்ஸை பயன்படுத்தி லோகேஷ் தனக்கென ஒரு யூனிவர்ஸை உருவாக்கியுள்ளார். இதனால் தளபதி 67 படமும் இந்த யூனிவர்ஸ்க்குள் வருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil movie thalapathy 67 update team travel in kashmire video viral