scorecardresearch

ஆக்ஷன் காட்சிகளுடன் விசில் தீம்… வலிமையின் மற்றொரு அப்டேட் கிடைச்சாச்சு…

Tamil Cinema Update : தல பொங்கல் என்று கூறி வந்த ரசிகர்கள் தற்போது ஏகே பொங்கல் என்று கூறி வருகின்றனர்.

Tamil Cinema Update For Valimai Whistle Theme Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் விமை படத்தில் நடித்து வருகிறார். தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வரும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். யுவன் சஙகர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், ஏறகனவே இந்த படத்தின் ஃபர்ஸ்லுக், ஃபர்ஸ் சிங்கிள், செகண்ட் சிங்கிள், மேக்கிங் வீடியோ என வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவியது. அந்த வகையில் மற்றொரு வலமை அப்டேட் இன்று வரும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் என்னவாக இருக்கும் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், என்று காலை முதலே ரசிகர்கள் காத்திருக்கினறனர்.

அதன்படி இன்று மாலை 3.30 மணியளவில் வலிமை படத்தின் விசில் தீம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்த நிலையில், தற்போது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழத்தும் விதமாக வலிமை படத்தின் விசில்தீம் 3.30 மணிக்கு வெளியிட்பபட்டுள்ளது.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட மேக்கிங் வீடியோவின் இறுதியில், அஜித் பைக் ஓட்டும்போது கீழே விழுந்ததை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில். அதன்பிறகு வந்த காட்சியில் மீண்டும்  ஸ்டண்ட் செய்தது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வலிமை விசில் தீம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

வெளியிட்ட அரைமணி நேரத்தில் இந்த தீம் சுமார் 4 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில், 1.30 லட்சம்பேர் இந்த லைக் செய்துள்ளனர். இந்த படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டத்தில் இருந்து தல பொங்கள் என்று கூறி வந்த ரசிகர்கள் தற்போது ஏகே பொங்கல் என்று கூறி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அஜித் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்று கூறியதுதான்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil movie valimai whistle theme released in youtube viral