முத்துவீரனாக முத்திரை பதித்தாரா சிம்பு? வெந்து தணிந்தது காடு விமர்சனம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு சிம்புவின் முழு நடிப்பு திறமையும் வெளிப்படுத்தி முத்துவீரனாகவே வாழ்ந்திருக்கிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சிம்புவின் முழு நடிப்பு திறமையும் வெளிப்படுத்தி முத்துவீரனாகவே வாழ்ந்திருக்கிறார்.

author-image
WebDesk
New Update
முத்துவீரனாக முத்திரை பதித்தாரா சிம்பு? வெந்து தணிந்தது காடு விமர்சனம்

எழுத்தாளர் ஜெயமோகன் கதையில் சிலம்பரசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ரஹ்மான் இசையில் பிரம்மாண்டமாக இன்று வெளிவந்திருக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் விமர்சனம்.

Advertisment

இப்படத்தின் ஆன்மாவாக "ரஹ்மான்" அவர்களின் இசையும், பாடல்களும் மெய்சிலிர்க்க வைக்கிறது. 30 வருடங்களுக்கு மேலாகியும் இந்த புயல் இன்னும் கரையை கடக்காமல் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது, அதை மீண்டும் ஒருமுறை ஆணித்தனமாக நிரூபித்துள்ளார் இசைபுயல்.

அதேபோல் நீண்ட நாட்களுக்குப் பிறகு சிம்புவின் முழு நடிப்பு திறமையும் வெளிப்படுத்தி முத்துவீரனாகவே வாழ்ந்திருக்கிறார். படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை  சிம்புவின் படமாக இல்லாமல் முத்துவீரனின் வாழ்க்கை தான் நம் கண் முன்னே தெரிகிறதே தவிர,சிம்பு ஒரு இடத்தில் கூட தெரியவில்லை என்பதுதான் அவர் நடிப்பின் வெற்றி.

வெறும் நடிப்பு மட்டுமல்லாமல் உடல் அளவில் அவர் செய்திருக்கும் அற்பணிப்பிற்கு சல்யூட். வழக்கமாக வரும் அமைதியான காதல், மென்மையான கதைகளம்,இதமான இசை போன்ற கௌதம் மேனனின் சாயலில் இருந்து மாறுபட்டு ஒரு புதிய கதைக்களத்தயும், புதிய உலகத்தையும் உருவாக்கி வென்றிருக்கிறார்.

Advertisment
Advertisements

மும்பையில் உள்ள "தாதா"க்களின்  வாழ்க்கையையும்,   அவர்களுக்காக வேலைசெய்யும் இளைஞர்களின் வாழ்கை போராட்டத்தையும் நேர்த்தியாகவும், உண்மையாகவும் காட்சிப்படுத்திய ஒளிப்பதிவு அற்புதம். குடும்ப கஷ்டத்திற்காக மும்பைக்கு வேலைக்கு செல்லும் ஒரு தமிழ் இளைஞன் எப்படி தாதாவாக மாறுகிறான் என்ற கதையை துளியும் சமரசம் இல்லாமலும், சுவாரசியமாகவும், நம்பத் தகுந்த முறையிலும் திரைக்கதை அமைத்திருப்பது படத்தின் வெற்றியை எளிதாக்குகிறது. 

அம்மாவாக வரும் ராதிகா தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் கலங்கடிக்கிறார். நாயகியாக வரும் சிதியின் தேர்வு கச்சிதம். அவருடைய காதல் காட்சிகள் ரசனையின் உச்சம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அப்புகுட்டிக்கு ஒரு தரமான கதாபாத்திரம் அதை மிக உண்மையாக செய்திருக்கிறார். பலமான திரைக்கதை இருந்தால் படத்தின் நீளம் படத்தின் வெற்றியை பாதிக்காது என்பதை இப்படம் நிரூபித்துள்ளது.

ஒரு கிராமத்தில் தொடங்கிய முத்துவின் பயணம் மும்பை சென்று அங்கே இருக்கும் சூழ்நிலைகளால் ஒரு அடியாளாக மாறி பின் இறுதியில் தாதாவாக மாறும் சுவாரசியமான கதைக்களமும், முடிவும் இரண்டாம் பாகத்திற்கான விதையை ஆழமாக விதைதிருக்கிறது. "கௌதமேனன் - சிம்பு"வின் உண்மையான உழைப்பிற்கும், சுவாரஸ்யமான கதை களத்திற்கும், ஆழமான அற்புதமான இசைக்கும், இப்படத்தை மிகப்பெரிய வெற்றி அடையச் செய்வதே ரசிகர்கள் கொடுக்கும் பரிசாக இருக்கும்.மொத்தத்தில் வெந்து தணிந்தது காடு - "வெற்றி பெற்றது".           

நவீன்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Simbu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: