பொது இடத்தில் லிப் லாக் கொடுத்த ஸ்ரேயா சரண்
தமிழ திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா சரண், ரஜினியுடன் சிவாஜி, தனுஷூடன் திருவிளையாடல் ஆரம்பம், விஜயுடன் அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட படங்களில்நடித்து பிரபலமானார். மேலும் திர்ஷ்யம் இந்தி ரீமேக்கில் அஜக் தேவன்கனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ரஷ்ய நாட்டு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயாவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஸ்ரோயா அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற த்ரிஷ்யம் 2 படத்தின் நிகழ்ச்சியில் கணவருடன் ஸ்ரேயா சரண் லிப் டூ லிப் கொடுத்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இதை ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
நயன்தாரா படத்தை தயாரிக்கும் கேஜிஎஃப் நிறுவனம்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக நயன்தாரா தற்போது ஷாருககானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து, நயன்தாரா புதிய படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். கே.ஜி.எ.ஃப் காந்தாரா படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிக்கலில் இருந்து வெளியேறிய வாரிசு
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. தெலுங்கு தயாரிப்பாளர் வம்சி இயக்கி வரும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் தமிழ் தெலுங்கில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பொங்கல் பண்டிகைக்கு நேரடி தெலுங்கு படங்களுக்கு முன்னிரிமை அளிக்கப்படும் என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது.
இதனால் வாரிசு படம் தெலுங்கில் வெளியாகவதில் சிக்கல் நீடித்து வந்த நிலையில், இது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழ் திரை பிரபலங்கள் இது குறித்து பேசி வருகின்றனர். ஆனால் வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியாவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தாவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவால் பாதிப்பு
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமீப காலமாக உடல் நலக்குறைவைால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்று உடல் நிலை தேறி அவர் நடிப்பில் வெளியான யசோதா படத்தின் ப்ருமொஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதனிடையே தற்போது சமந்தாவுக்கு மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து இன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாரிசு படத்திற்கு அடுத்த சிக்கல்
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. தெலுங்கு தயாரிப்பாளர் வம்சி இயக்கி வரும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் தமிழ் தெலுங்கில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வாரிசு படத்தின் படப்பிடிப்பில் முன் அனுமதி பெறாமல் 5 யானைகளை பயன்படுத்தியதாக கூறி 7 நாட்களுக்குள் இது குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று விலங்கு நல வாரியும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil