பீஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு படம் அடுத்த ஆண்டு பெங்கல் தினத்தில் வெளியாக உள்ள நிலையில, இப்படத்தின் முதல் சிங்கிள் அடுத்து வாரம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ இயக்கும் இந்த படத்தில் வாரிசு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்
விஜய் சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு முழுக்க முழுக்க குடும்ப பின்னணி கொண்ட படத்தில் நடித்து வரும் வாரிசு வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. மேலும் வாரிசு படத்தின் மூலம் முதன் முதலாக இசையமைப்பாளர் தமன் விஜய் படத்திற்கு இசையமைத்து வருகிறார். தீபாவளி தினத்தில் இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Happy Diwali nanba 🧨
— Sri Venkateswara Creations (@SVC_official) October 24, 2022
Next week la irundhu summa pattasa irukum 🔥#VarisuPongal #Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @KarthikPalanidp @Cinemainmygenes @scolourpencils @vaishnavi141081 #Varisu pic.twitter.com/M9KuWSfhuE
ஆனால் தீபாவளி தினத்தை முன்னிட்டு நேற்று வாரிசு படத்தின் அப்டேட் வெளியாகாத நிலையில். படத்தின் முதல் சிங்கிள் அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை உறுதி செய்துள்ள தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஹேப்பி தீபாவளி நண்பா அடுத்த வாரத்தில் இருந்து செம பட்டாசா இருக்கும் என்று பதிவிட்டுள்ளது.
#Varisu First Single Track Expected Next Week!
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 24, 2022
இதனால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில், பாடல் மீதான எதிர்பார்பும் அதிகரித்துள்ளது. கடைசியாக வெளியான பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இணையத்தில் சக நடிகர்கள் பலரும் இன்ஸ்டா ரீல்ஸ் செய்து வெளியிட்டு ட்ரெண்ட் செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“