scorecardresearch

குடும்பத்தை காப்பாற்றும் நம்பிக்கை நாயகன் : வாரிசு முத்திரை பதித்ததா?

விஜய் மாஸ் தருணங்கள், நான்கு சண்டைகள், ஆடம்பரமான பாடல்கள், மசாலா, அம்மா-மகன் செண்டிமெண்ட்

குடும்பத்தை காப்பாற்றும் நம்பிக்கை நாயகன் : வாரிசு முத்திரை பதித்ததா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் முதல்முறையாக ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகியுள்ள வாரிசு படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு, ஜெயசுதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வம்சி இயக்கியுள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தில் ராஜூ தயாரித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விஜய் சில வருட இடைவெளிக்கு பிறகு குடும்ப கதையில் நடித்துள்ளார் என்பதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை வாரிசு படம் பூர்த்தி செய்துள்ளதா என்பதை பார்ப்போம்.

சரத்குமார் ஜெயசுதா தம்பதிக்கு ஸ்ரீகாந்த், ஷாம், விஜய் ஆகிய 3 மகன்கள். இதில் முதல் இரு பிள்ளைகளும் அப்பாவின் பேச்சை கேட்டு பிஸினசில் இறங்க விஜய் மட்டும் தனது சொந்த காலில் நிற்க வேண்டும் என்று சொல்லி மறுத்துவிடுகிறார். இதனால் அப்பா சரத்குமார் மகன் விஜய் இடையே விரிசல் எழ விஜய் வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார். 7 வருடங்களுக்கு பிறகு விஜய் மீண்டும் வீடு திரும்பும்போது அவரது குடும்பம் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

ஒருகட்டத்தில் அப்பாவின் பிஸினஸை மகன் விஜய் பொறுப்பேற்று நடந்த வேண்டிய சூழல் ஏற்பட விஜய் என்ன முடிவு செய்தார். பிரச்சினைகளில் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்றினாரா என்பதே வாரிசு படத்தின் மீதிக்கதை. படத்தின் முதல் ப்ளஸ் விஜய். தனது வழக்கமான அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி படத்தை மொத்தமாக தோளில் சுமந்து நிற்கிறார்.

துல்லியமாகச் சொன்னால், ஒரு சந்தர்ப்பத்தில், தீ தளபதி பாடல் வாரிசு ஒரு விஜய்யின் படமாக மாறிவிட்டது. எடிட்டிங் அட்டகாசமாக இருந்தது. மற்றும் விஜய்யின் ஸ்லோ-மோஷன்ஸ் காட்சிகள் ரசிகர்களை மகிழ்சிசயில் ஆழ்த்துகிறது. திடீரென நிறுவன பொறுப்பாளர், வீட்டில் பிரச்சினைகளை தீர்ப்பது, கடத்தப்பட்ட பெண்னை காப்பாற்றுவது என திரைப்படம் தனது பாதையில் இருந்து விலகி செல்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

மேலும் பல நிகழ்வுகளில்,வாரிசு மெட்டா-காமெடியாக மாறுகிறது. பாடல்களும் சண்டைக்காட்சிகளும் எதிர்பார்த்தபோலவே அமைந்துள்ளது. ஆனால் குழப்பமாக இருக்க வேண்டிய அனைத்தும் பல காட்சிகளை ரசிகர்கள் நம்ப வேண்டிய காட்சிகளாக மாறியுள்ளது. ஸ்ரீமந்துடு, ஆலா வைகுண்டபுரமுலோ, அத்தாரிண்டிகி தாரேடி உள்ளிட்ட பல படங்களின் கலவையாக வாரிசு உள்ளது.

மேலும் பேரரசை/குடும்பத்தைக் காப்பாற்றும் ஒரே நம்பிக்கையாக மாறும் மகனினை பற்றிய கதை தான் வாரிசு. ‘விஜய் மாஸ் தருணங்கள்’, ‘நான்கு சண்டைகள்’, ‘ஆடம்பரமான பாடல்கள்’, ‘மசாலா’, ‘அம்மா-மகன்’ செண்டிமெண்ட் என முக்கிய வார்த்தைகளால் வர்ணிக்கப்படும்  திரைக்கதையில் ஒரு படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் வம்சி. சென்டிமென்ட்’, மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவரின் பிரச்சினைகளையும் ஹீரோ சரிசெய்து, ஒரு எதிரியை எதிர்த்துப் போராடும் ஒரு பிஸினஸ் குடும்ப படம். ஆனால் படத்தில் புதுமை மிஸ்ஸிங்.

ஆனால் இது கதைக்களத்தைப் பற்றிய படம் அல்ல, இது மெல்லிய கதையில் உருவாக்க விரும்பும் தருணங்களைப் பற்றியது. தனது ரசிகர்கள் கொண்டாடும் வகையில் விஜய் இந்த படத்தில் நடனத்தில் பின்னி பெடலெடுத்துள்ளார் என்று சொல்லலாம். அதேபோல் ஆக்ஷன் படங்களில் இருந்து விஜய் மீண்டும் காமெடிக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. யோகி பாபுவுடனான அவரது காட்சிகள், மிகக் குறைவானவை என்றாலும், படத்திற்கு மிகப்பெரிய பலம்.

யோகி பாபு இல்லாத நிலையில், தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் கலகலப்பாக்கும் வேலையை விஜய் செய்துகொள்கிறார். மற்றவர்களை விட வம்ஷி தனது படத்தை தானே கலாய்த்துக்கொள்கிறார். படம் எதிர்கொள்ளக்கூடிய அனைத்து விமர்சனங்களையும் கருத்தில் கொண்டு எழுதியது போல் தெரிகிறது. மேலும் அவை அனைத்தையும் அவர் அனைவரும் ரசிக்கும் அளவுக்கு மாற்றியுள்ளார், இது படத்தின் பல சீன்களில் தெரிகிறது.

அனைவரும் யூகிக்கக்கூடி திரைக்கதையாக இருந்ததால் அடுத்து என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வாரிசு படம் தவறிவிட்டது. ஆனால் இதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை. இது அனைவருக்கும் பொதுவானது. அனுபவத்தில் புதுமை இல்லை. ஒன்றன்பின் ஒன்றாக அல்லது ஒரு நகைச்சுவைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். ஒரு படத்தை விட வாரிசு ஒரு தயாரிப்பாக பாக்கிறோம். ஒரு குறிப்பிட்ட அனுபவத்திற்காகவும், குறிப்பிட்ட நபர்களுக்காகவும் அமைக்கப்பட்ட இந்த படம் சினிமா பார்த்ததை விட மகிழ்ச்சியான பொழுதை கழிக்க செய்த திருப்தியை ஏற்படுத்துகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil movie varisu review and rating update in tamil