தனி விமானத்தில் ரஜினிகாந்த் மகளுடன்..
நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது மகளுடன் தனி விமானத்தில் ஆன்மீக சுற்றுலா என்றுள்ள நிலையில், அவருடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மற்றும் அவரது மகன் ஆகியோர் சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை ரஹ்மான் மகன் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
மகன்களுடன் அவதார் பார்த்த நடிகர்
நடிகர் தனுஷ் தற்போது வாத்தி, கேப்டன் மில்லர் உள்ளிட்ட சில படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் அவ்வப்போது தனது மகன்களுக்காக நேரத்தை ஒதுக்கி அவர்ளுடன் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். இது தொடார்பான புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில், தற்போது தனுஷ் தனது மகன்களுடன் அவதார் 2 படத்தை பார்த்துள்ளார். படம் முடிந்த பிறகு வெளியில் வரும் தனுஷ் வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
வாரிசு கதையை நிராகரித்த தெலுங்கு நடிகர்கள்?
பீஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜூ தயாரித்து வரும் இந்த படத்தின் கதையை முதலில் தில் ராஜூ நடிகர் மகெஷ்பாபுவிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மகேஷ்பாபு வம்சி இயக்கத்தில் மகரிஷி என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால் மகேஷ்பாபு வாரிசு கதையில் நடிக்க மறுத்ததால், அடுத்த ராம்சரனிடம் கூறியதாகவும், அவர் ஷங்கர் படத்தில் பிஸியாக இருப்பதால் நடிக்க முடியாது என்று கூறிய பிறகு இந்த கதையை விஜயிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாரிசு vs துணிவு – அஜித் மேனேஜர் போட்ட ட்விட்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிப்பில் வாரிசு அஜித் நடிப்பில் துணிவு ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. இதில் வாரிசு படத்தை விட துணிவு படத்திற்கு அதிக தியேட்டர் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ அஜித்துடன் ஒப்பிடும்போது விஜய்தான் நம்பர் ஒன் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அஜித் மேனேஜர் வெளியிட்டுள்ள பதிவில், அஜித் புகைப்படத்துடன் தைரியம் இல்லை என்றால் பெருமை இல்லை என்று பதிவிட்டுள்ளார்.
ஊரை காலி செய்வதாக அறிவித்த பிரபல இயக்குனரின் தம்பி
தமிழில் அன்பு என்ற படத்தின் மூலம் அறிமுகமானாலும், சரியான வாய்ப்பு இல்லாததால் மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி பாலா வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் இவர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த ஷபிக்கின்டே சந்தோஷம் என்ற மலையாள படத்தில் சம்பளம் சரியாக தரவில்லை என்று கூறியிருந்தார். இதனை மறுத்த அப்படத்தின் தயாரிப்பாளர் சம்பளம் கொடுத்த வங்கி கணக்கு விவரங்களை இணையத்தில் பதிவி்டிருந்தார்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நடிகர் பாலா தான் சென்னை செல்வதாகவும், எனக்கு இங்கு தங்க விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் தான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கூறியுள்ள அவர், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் தான் சம்பள பிரச்சினை என்று என்னிடம் சொன்னார்கள்.ஆனால் இப்போது அவர்கள் அமைதியாவிட்டார்கள் நான் குற்றவாளியாகிவிட்டேன் என்றும் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil