தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை படப்பிடிப்பில் ரோப் அறுந்து விழுந்து சண்டை பயற்சியாளர் பலியாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன், தனுஷின் அசுரன் படத்திற்கு பிறகு விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். கதையின் நாயகனாக பிரபல காமெடி நடிகர் சூரி நடித்து வரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற நாவலை தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இளையராஜா இசையமைத்து வரும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இயக்குனர் கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து நடித்து வரும் இந்த படத்தை. எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், போலீஸ் கான்ஸ்டபிளாக சூரியும், டீச்சராக விஜய் சேதுபதிவும் நடித்து வருகின்றனர்.
இரண்டு பாகங்களாக தயாராகி வரும் விடுதலை படத்தின் இறுதிக்கப்பட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. இதனிடையே இன்று சென்னை கேளம்பாக்கம் பகுதியில் விடுதலை படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
இதில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டபோது ரோப் கயிறு அறுந்து விழுந்ததில் சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் படப்பிடிப்பு தளத்திலேயே மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil