scorecardresearch

Beast Full Movie Leaked: பீஸ்ட் முழுப் படமும் ஆன்லைனில் ‘லீக்’: வசூல் பாதிக்கப்படுமா?

Thalapathy Vijay’s Beast leaks on tamilrockers : பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியான பீஸ்ட் படம் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தினாலும், கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

Beast movie leaks, Beast movie download
Beast movie leaks

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் தயாராகியுள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்தில பூஜா ஹெக்டே நாயகியாகவும், இயக்குநர் செல்வராகவன் முக்கிய கேரக்டரிலும் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியான பீஸ்ட் படம் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தினாலும், கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இந்நிலையில் பீஸ்ட் படம் வெளியான முதல் நாளிலேயே திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புதுப்படங்கள் வெளியாகும்போது அதை உடனே இணைதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில். தற்போது பீஸ்ட் திரைப்படம், தமிழ்ராக்கர்ஸ், மூவிருல்ஸ் உள்ளிட்ட பல இணையதளங்களில் வெளியிடப்பட்டு டொரண்ட் இணையதளங்கள் மூலம் இலவசமாக பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது.

ஏற்கனவே  விவேக் அக்னிஹோத்ரியின் தி காஷ்மீர் ஃபைல்ஸ், ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம், அஜீத்குமாரின் வலிமை, யாமி கெளதம் மற்றும் நேஹா தூபியாவின் ஏ தர்ஸ்டே உள்ளிட்ட பல படங்கள் வெளியான முதல் நாளிலேயே டொரண்ட் இணையதளங்கள் மற்றும் தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட பிற இணையதளங்களில் கசிந்தன.

அதேஅல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெயினா புஷ்பா: தி ரைஸ் வெளியான சில மணி நேரங்களிலேயே பல தளங்களில் கசிந்தது. ரன்வீர் சிங்கின் 83, சல்மான் கானின் ஆன்டிம்: தி ஃபைனல் ட்ரூத், அக்‌ஷய் குமாரின் சூரியவம்ஷி ஆயுஷ்மான் குரானாவின் சண்டிகர் கரே ஆஷிகி, மற்றும் அஹான் ஷெட்டியின் தடாப் போன்ற பல பாலிவுட் படங்களும் திரையரங்குகளில் வெளியாகி உடனே இணையத்தில் வெளியாகி பெரும் வீழ்ச்சியை சந்தித்து. .

அந்த வகையில் தற்போது, விஜய்யின் பீஸ்ட் படம் இணையத்தில் கசிந்துள்ளது. ஏற்கனவே படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், தற்போது பீஸ்ட் இணையத்தில் கசிந்துள்ளது படத்தின் வசூலை பெருமளவு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil movie vijay beast lakes in tamil rockers and other websites

Best of Express