scorecardresearch

ஒரே இடத்தில் ஜெயிலர் – ஜவான் படப்பிடிப்பு : ரஜினி – ஷாருக் மீட் எப்போது?

ஜவான் படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈசிஆரில் உள்ள ஆதித்ய ராம் பிலிம் சிட்டியில் நடைபெற்றுள்ளது. அதே இடத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பும் நடந்துள்ளது.

ஒரே இடத்தில் ஜெயிலர் – ஜவான் படப்பிடிப்பு : ரஜினி – ஷாருக் மீட் எப்போது?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், அவர் நடிகர் ரஜனிகாந்தை நேரில் சந்தித்துள்ளதாக வெளியான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்து வரும் படம் ஜவான். நயன்தாரா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஜவான் படத்தின் முக்கியமான ஆக்‌ஷன் காட்சியை படமாக்க ஷாருக்கான் சென்னையில் முகாமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தை அட்லீ இயக்கியிருப்பதாலும், தமிழ் நட்சத்திரங்களின் முக்கியத்துவத்தாலும் இப்படம் தென்னிந்தியாவிலும் பெரிய ஓப்பனிங்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஜவான் படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈசிஆரில் உள்ள ஆதித்ய ராம் பிலிம் சிட்டியில் நடைபெற்றுள்ளது. அதே இடத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பும் நடந்துள்ளது.

ரஜினியின் மிகப்பெரிய ரசிகரான ஷாருக்கான், எப்போதுமே ரஜினிகாந்த் மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் வாய்ப்பை தவறவிட்டதில்லை. ஏற்கனவே அவர் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் இடம்பெற்ற, ​​‘தலைவா’ என்ற பாடல் ரஜினிகாந்துக்கு புகழ் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கும். மேலும் இந்த பாடல் மூலம் லுங்கி நடனம் என்ற சிறப்பு நடனத்தையும் சேர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஷாருக்கானின் நடிப்பில் 2011-ம் ஆண்டு வெளியான ராஒன் படத்தில் சூப்பர்-மனித உருவம் கொண்ட சிட்டியாக ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதனிடையே தற்போது அருகில் ரஜினிகாந்த் படத்தின் ஷூட்டிங் நடக்கிறது என்பதை தெரிந்துகொண்டு ஷாருக்கான் எப்படி ரஜினிகாந்தை சந்திக்காமல் சென்றுவிடுவார் என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

ரஜினிகாந்த் தயாராகி வரும் ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கி வருகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினி, போகர் முகத்துடன் கண்டிப்பான அதிகாரியாக வரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமன்னா பாட்டியா, விநாயகன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil movie when shah rukh khan jawan met rajinikanth jailer