Tamil movies controversies 2018 : 2018ம் ஆண்டு நிறைவடைந்து புதிய வருடம் பிறக்க இன்னும் 5 நாட்களே உள்ளது. ஆனாலும் இந்த வருடம் வெளியான சில படங்களின் சர்ச்சை மட்டும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
பாலா இயக்கத்தில் பிப்ரவரி மாதம் வெளியான நாச்சியார் படத்தில் இடம்பெற்ற பீப் வார்த்தை உட்பட முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் திரைப்படம் வரை தமிழ் சினிமா பல சர்ச்சைகளை இந்த வருடம் எதிர்கொண்டது.
Tamil movies controversies 2018 : தமிழ் சர்ச்சை படங்கள் 2018
அந்த வகையில், ஒரு சில படங்கள் மட்டும், சர்ச்சையின் உச்சத்தை தொட்டு மக்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வருடமே ஓய்ந்தால் கூட இந்த சர்ச்சைகளில் பேச்சு மட்டும் ஓயவே ஓயாது என்பது போல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
1. சர்கார்/tamil-ie/media/media_files/uploads/2018/12/sarkar-768x1024.jpg)
சர்கார் படத்தின் முதல் போஸ்டர் வெளியான நாளில் இருந்து படம் ரிலீஸாகி தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் சர்ச்சையின் மையமாக இருந்தது சர்கார். போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போல் இருந்ததையடுத்து அக்காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்று பாமக சார்பில் புகர் அளிக்கப்பட்டது. ஒரு வழியாக அந்த பிரச்சனை தீர்ந்தது என நினைப்பதற்குள் சூடு பிடித்தது படத்தில் இருந்த இலவச பொருட்கள் காட்சி. இலவச பொருட்களை மக்கள் எரிக்கும் காட்சிகள் இடம்பெற, அதிமுக-வினர் சர்கார் பேனர்களை கிழித்தெரியும் வேலையில் இறங்கினர். இதனால் படத்தில் திரையிடல் நிறுத்தப்பட்டு, மறுத்தணிக்கை செய்யப்பட்டது. அக்காட்சிகள் எல்லாம் நீக்கப்பட்ட பின்னரே சர்கார் தியேட்டரில் ஓடியது.
2. இருட்டு அறையில் முரட்டு குத்து
/tamil-ie/media/media_files/uploads/2018/12/iruttu-araiyil-murattu-kuthu.jpg)
இயக்குநர் சந்தோஷ் ஜெய்குமார் இயக்கியுள்ள படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. அடல்ட் காமெடி என்ற பெயரில் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற இப்படத்தின் பெயரை சொன்னாலே இன்னும் ஒரு சிலரிடையே கோபத்தை பார்க்க முடிகிறது. படத்தின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை வானங்களில் மட்டுமின்றி காட்சிகளிலும் ஆபாசம் நிறைந்திருந்தது. மேலும் ஒரு பாலினத்தவர்களை அப்படம் தவறாக சித்தரித்துள்ளது எனக் குற்றச்சாட்டுகளும் எழுந்தது. மேலும் பிறர், இது போன்ற படங்கள் எடுக்கவே கூடாது இளைஞர்கள் மத்தியில் தவறான விஷயங்களையே இவைக் கொண்டு சேர்க்கும் என எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் இப்படம் வெளியாகிய பின்னர் தியேட்டர் முழுவதும் இளைஞர்கள் கூட்டமே நிரம்பி வழிந்தது
3. காலா/tamil-ie/media/media_files/uploads/2018/12/kaala.jpg)
பா. இரஞ்சித் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான காலா படம் பயங்கர வரவேற்பை பெற்றது. படத்தின் ரிலீசுக்கு உலகமே எதிர்ப்பார்த்திருந்த நேரத்தில் தான் காவிரி நதிநீர் பிரச்சனையும் சூடு பிடித்திருந்தது. காவிரி நதிநீரை தமிழகத்திற்கு திறக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்புக்கு ஆதரவாக ரஜினிகாந்த் குரல் கொடுக்க அவரின் திரைப்படத்தை கர்நாடக மாநிலத்தில் வெளியிடக் கூடாது என முதல்வர் குமாரசாமியும் கூறியிருந்தார். பின்னர் இதற்காக பெங்களூரூ புறப்பட்டு சென்ற ரஜினிகாந்த், சில பஞ்சாயத்துகளை முடித்த பின்னர் படத்தில் வெளியீட்டை மக்களே முடிவு செய்வார்கள் எனக் கூறினார்.
4. வடசென்னை
/tamil-ie/media/media_files/uploads/2018/12/vada-chennai.jpg)
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் வடசென்னை. இந்த படத்தில் வட சென்னை பகுதியில் வாழும் மக்களை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி கடும் எதிர்ப்புகள் எழுந்தது. இந்த எதிர்ப்புகளை அடுத்து ஒரு சில காட்சிகளும் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டது. பின்னர் படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், வருத்தம் தெரிவித்து வீடியோவும் வெளியிட்டார்.
5. 96
/tamil-ie/media/media_files/uploads/2018/12/96-movie-stills.jpg)
த்ரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘96’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 96 படத்தின் கதை என்னுடையது என்று சுரேஷ் என்பவர் போர்கொடி தூக்கினார். இதில் 96 திரைப்படத்தின் கதை தான் எழுதி பாரதிராஜா இயக்க இருந்த ‘பால்பாண்டி என்கிற பாரதி’ படத்தின் கதை என சுரேஷ் என்பவர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.இந்த சர்ச்சை குறித்து 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் மனம் திறந்து பேசினார்.
2018 ஆண்டில் ஒட்டு மொத்த ஊரும் இதப்பத்தி தான் பேசிச்சு!