நாளை முதல் புதிய படங்கள் வெளியீடு : விஷால் அறிவிப்பு

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை முதல் படங்கள் வெளியீடு.

சமீபத்தில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 48 நாட்களுக்கு மேலாக நீடித்த இந்தப் போராட்டத்தால் தமிழ்த் திரைப்படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் தற்போது போராட்டம் வாபச் பெறப்பட்ட நிலையில், புதுப்படங்களைத் திரையிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் சினிமா டிக்கெட் உர்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இது குறித்து நேற்று அரசு அதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் தீர்வு எட்டப்பட்டது. இதில் இ- சினிமா கட்டணங்கள் 50% குறைந்துள்ளது. மேலும் இயந்திரம் மூலம் டிக்கெட் பெறும் வசதி ஜூன் மாதத்திலிருந்து துவங்க உள்ளது. குறிப்பாக தமிழ்நாடு சினிமா டிக்கெட் விவகாரத்தில் அனைத்து இனி வெளிப்படையாக நடைபெறும் என்றும் விஷால் கூறினார்.

கடந்த மாதம் மட்டுமே 25க்கும் மேலான படங்கள் திரையிடத் தயாராக இருந்தது. இதே போல இந்த மாதம் 10 படங்கள் வெளியாகத் தயார் நிலையில் உள்ளது. இருப்பினும் திரையுலக போராட்டத்தினால் தமிழ் திரைப்படங்கள் வெளியிடத் தடை இருந்தது. மேலும் பல திரையரங்குகள் செயல்படாமலும் இருந்தது. தற்போது மாறியுள்ள இந்த நிலையால், நாளை முதல் புதிய படங்கள் வெளியிடப்பட உள்ளன.

வாபஸ்க்கு பின் வெளியாகும் முதல் திரைப்படமாக பிரபு தேவா நடித்த “மெர்குரி” படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள சைலெண்ட் படம் நாளைத் திரையரங்குகளை சென்றடைகிறது. மக்கள் நாளை முதல் திரையரங்களில் திரைப்படம் காணலாம் என்று கூறப்பட்டு வருகிறது.

மேலும் இதனையடுத்து, திட்டமிட்டபடி ரஜினியின் ‘காலா’ படமும், கமலின் ‘விஸ்வரூபம்’ படமும் வெளிவர உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

×Close
×Close