தமிழ் சினிமாவில், இசையமைப்பாளர் நடிகர் என பிரபலமாக இருந்து வரும் ஜி.வி.பிரகாஷ் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில், விரைவில் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். 2000-ம் ஆண்டு கேங் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், 2003-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான பாஞ்ச் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஆனால் இந்த படம் வெளியாகாத நிலையில், அதன்பிறகு பிளாக் ப்ரைடே என்ற படத்தை இயக்கி அதில் காவல்துறை அதிகாரியாகவும் நடித்திருந்தார்.
தொடர்ந்து இயக்கம் நடிப்பு என பிஸியாக இருக்கும் அனுராக் காஷ்யப், கடைசியாக கடந்த ஆண்டு வெளியான கென்னடி என்ற படத்தை இயக்கி இருந்தார். அதேபோல் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து தமிழில் அறிமுகமான இவர், லியோ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். தற்போது ஒன் டூ ஒன் என்ற படத்தில் நடித்து வரும் அனுராக் காஷ்யப் விரைவில் ஒரு தமிழ் படத்தை இயக்க உள்ளார்.
ஒரே நேரத்தில் தமிழ்-இந்தி என இருமொழிகளில் தயாராக உள்ள இந்த படத்தில், இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், இந்த படம் ஜி.வி.பிரகாஷ் இந்தி திரையுலகில் அறிமுகமாகும் முக்கிய படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அனுராக் – ஜி.வி இணைவது குறித்து கடந்த ஆண்டு தகவல் வெளியானது.
தமிழ் படங்களின் ரசிகராக இருக்கும் அனுராக் காஷ்யப் சமீபத்திய தென்னிந்திய படங்களை அடிக்கடி பார்த்து வருகிறார். மேலும் நடிகரும் இயக்குனருமான சசிகுமாரின் 'சுப்ரமணியபுரம்' படத்தை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டு 'கேங்க்ஸ் ஆஃப் வாசிஃபர் என்ற படத்தை இயக்கி அப்படத்திற்கு' புகழ் சேர்த்த அனுராக் தமிழ் படங்கள் குறித்த தனது விமர்சனங்களை பகிர்ந்து கொள்வதையும் தொடர்ந்து வருகிறார்.
அதேபோல் ஜி.வி.பிரகாஷ் சீயான் விக்ரம் மற்றும் பா.ரஞ்சித் கூட்டணியில் வெளியாக உள்ள 'தங்கலான்' படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். அதேபோல் 'எமர்ஜென்சி', 'லக்கி பாஸ்கர்', 'அமரன்', 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்', 'சூர்யா 43' மற்றும் 'சியான் 62' ஆகிய படங்கள் இசையமைப்பாளராக வரவிருக்கின்றன. அதேபோல் அடுத்து, மார்ச் 22ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸுக்குத் தயாராகி வரும் 'ரெபெல்' படத்தில் நாயகனாக நடித்துள்ளார். 'இடிமுழக்கம்', '13', 'கள்வன்' மற்றும் 'அன்பே' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.