வினேஷ் போகத் வெற்றியாளர் தான் மில்லியன் கணக்கான இதயங்களை வென்றுள்ளார் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ஆதரவை தெரிவித்து, தனது சமூகவலைதள பக்கததில் பதிவிட்டுள்ளார்.
பாரிசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் இந்தியாவின் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 50 கிலோ இடை பிரிவில் பங்கேற்றார். முதல் சுற்று, 2-வது சுற்று, காலிறுதி, அரையிறுதி என அனைத்து பிரிவிலும் உலகின் பலம் வாய்ந்த வீராங்கனைகளுடன் மோதி வெற்றி கண்ட வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியிருந்தார். அவருக்கு இந்திய ரசிகர்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.
இதனிடையே இறுதிப்போட்டிக்கு சிலமணி நேரங்களுக்கு முன்பாக, வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத் அனுமதிக்கப்பட்ட எடையைவிட 100கிராம் அதிகமாக இருப்பதால் அவர் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் கனவு தகர்ந்தது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறி விளையாட்டுதுறை அமைச்சருக்கு எதிராக வீரர் வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் முக்கிய வீராங்கனையாக திகழ்ந்தவர் வினேஷ் போகத். அதை மனதில் வைத்து வேண்டுமென்றே இப்படி செய்துவிட்டார்கள் என்று பலரும் கூறி வரும் நிலையில், வினேஷ் போகத்துக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
நீங்கள் பதக்கம் வெல்லவில்லை என்றாலும், எப்போதும் நீங்கள் வெற்றியாளர் தான் என்று பலரும் கூறி வரும் நிலையில், தற்போது வினேஷ் போகத் மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதனிடையே வினேஷ் போகத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, வினேஷ் போகத் வென்றார். மில்லியன் கணக்கான இதயங்களை வென்றுள்ளார். கடினமாக நேரங்களை வலிமையான மனிதர்களை உருவாக்குகின்றன.
நீங்கள் தனியாக இல்லை. எது வந்தாலும் நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். உறதியாக இருங்கள் என்று யுவன் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து நெட்டிசன்கள் யுவன் ரசிகர்கள் என பலரும் தங்களது கருத்துக்களையும் வினேஷ் போகத்துக்கு தங்களது ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“