ஆன்டி இண்டியன் படத்தை எதிர்த்த பாஜக நிர்வாகி : புகாா் அளித்த தயாரிப்பாளர்

Tamil Cinema Update : ஆன்டி இண்டியன் படத்தை வெளியிட விடாமல் தடுத்த பாஜன நிர்வாகி மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tamil Movie Anti Indian Issue Update : தமிழில் கடந்த வாரம் வெளியான ஆன்டி இண்டியன் திரைப்படத்தை வெளியிட விடாமல் தடுத்த பாஜக நிர்வாகி மீது புகார் அளித்துள்ளதாக படத்தின் இயக்குநர் புளுசட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழில் மட்டுமல்லாது மற்றமொழி திரைப்படங்களும் யூடியூப்பில் விமர்சனம் செய்து புகழ்பெற்றவர் இளமாறன் (புளுசட்டை மாறன்) ஏறக்குறைய அனைத்து படங்களையும கடுமையாக விமர்சித்துவரும் இவர் தற்போது ஆன்டி இண்டியன் என்ற படத்தை இயக்கியுள்ளார். மூன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆதம் பாவா தயாரித்துள்ள இந்த படம் கடந்த 10-ந் தேதி வெளியானது.

இறந்த ஒருவரின் உடலை வைத்துக்கொண்டு எப்படி மத அரசியல் நடக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் மற்றும் அரசியல் பிரபமுகர்கள் பலரும் இந்த படத்தை பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில், பெரியகுளம் பார்வதி திரையரங்கில் இந்த படத்தை வெளியிட விடாமல் பாஜக நகர செயலாளர் ராஜபாண்டி என்பவர் தனது அடியாட்களுடன் சென்று தகராறில் ஈடுபட்டதாக படத்தின் தயாரிப்பாளர் ஆதம் பாவா காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இதுபோன்ற பூகார்கள் வந்தால் படத்தின் ப்ரமோஷனுக்கு உதவும் என்று கூறி படத்தின் இயக்குநர் மாறன் இணையதளம் வழியாக புகார் அளித்துள்ளார்.

ஆனால் தற்போது பெரியகுளம் பார்வதி திரையரங்கில் ஆன்டி இண்யடின் திரைப்படத்தை திரையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்து.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu anti indian movie producer complaint against bjp secretary

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com