Leo show timings: லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் லியோ.இத்திரைப்படம் வருகிற 19ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் பான் இந்தியா அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
/indian-express-tamil/media/media_files/qSwXDUo58JCNGwD8GTjG.jpg)
இந்தத் திரைப்படத்துக்கு முதல் 4 நாள்கள், நாள்தோறும் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதாவது, இந்தப் படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி அளித்திருந்தாலும் 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதனிடையே படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசு முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் நள்ளிரவு 1.30 மணி வரை காட்சிகள் திரையிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் லியோ படக்குழு அதிகாலை 4 மணி மற்றும் 7 மணிக் காட்சிகளுக்கு அனுமதி கோரியது.
/indian-express-tamil/media/media_files/qDwbtzLpHzcC2z9fR1Ob.jpg)
இதுதொடர்பாக லியோ படக்குழு வழக்கறிஞர்கள் குழு தலைமை செயலரை சந்தித்து மனு அளித்தார்கள். இதற்கிடையில் இது தொடர்பாக பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “உயர் நீதிமன்றம் உத்தரவிட்டால் லியோ படத்திற்கு காலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படும். திரைத்துறையில் அரசின் தலையீடு இல்லை” என்றார்.
இந்த நிலையில், 'லியோ' திரைப்படத்தின் காட்சிகளை காலை 7 மணிக்கு அனுமதிப்பதற்கான சாத்தியக்கூறுகளை மறுபரிசீலனை செய்த தமிழக அரசு முந்தைய முடிவில் உறுதியாக உள்ளது.
/indian-express-tamil/media/media_files/Yd66TRA2yyYsMBfytKnp.jpg)
அக்டோபர் 19 முதல் 24 வரை காலை 9 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம், வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோரின் கருத்துகளை கருத்தில் கொண்டு அரசு எடுத்த முடிவு குறித்து செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுக்கு உள்துறை செயலாளர் பி.அமுதா கடிதம் எழுதியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“