இந்திக்கு எதிராக தமிழ் திரை நட்சத்திரங்கள்: ட்விட்டரில் டிரென்டிங்

Yuvan shankar raja : ஹிந்தி_தெரியாது_போடா என்ற ஹேஸ்டேக், தேசிய அளவில் நெட்டிசன்கள் டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர். இதற்கு பாரதிய ஜனதா கட்சியின் நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் எதிர்வினை ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

By: Updated: September 6, 2020, 11:16:08 AM

மதுரையில் இந்தி மொழியிலான பாரதிய ஜனதா கட்சியின் போஸ்டர்கள் என சிறிதுசிறிதாக தமிழகத்தில் இந்தி மொழி திணிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் திரை உலகில் பலர் தற்போது இந்திக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் சாந்தனு ஆகியோர் இந்த டிரெண்டில் இறங்கி உள்ளனர்.

சமீபத்தில், சென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் அதிகாரி ஒருவர் திமுக எம்பி கனிமொழியை பார்த்து நீங்கள் இந்தியரா என்று கேள்வி கேட்ட சர்ச்சை இன்னும் முடியவில்லை. திமுக எம்பி கனிமொழி தனக்கு இந்தி தெரியாது என்று கூறிய காரணத்தால், அந்த அதிகாரி கனிமொழியை பார்த்து இப்படி கேள்வி எழுப்பி இருக்கிறார். இதை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனும் தனக்கு இந்தி தெரியாத காரணத்தால் விமான நிலைய ஊழியர்கள் தன்னை மோசமாக நடத்தியதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், திரை உலகில் பலர் இந்திக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். நடிகர்கள், இசையமைப்பாளர்கள் இந்திக்கு எதிராக பேச தொடங்கி உள்ளனர். இளம் நடிகர்கள், பிரபலங்கள் பலர் இந்த டிரெண்டில் குதித்து உள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் சாந்தனு ஆகியோர் இந்த டிரெண்டில் இறங்கி உள்ளனர்.

கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, டி- சர்ட் ஒன்றை அணிந்துள்ளார். அதில் நான் தமிழ் பேசும் இந்தியன் என்று பொருள்படும் வகையில் “ஐ யம் எ தமிழ் பேசும் இந்தியன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவரின் இந்த டி சர்ட் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இதில் திருவள்ளுவர் படமும் இருக்கிறது. இந்த போட்டோவை, மெட்ரோ ஸ்ரீரிஷ், தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனை யுவன், தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பலர் யுவனின் செயலை பாராட்டி வருகிறார்கள்.


யுவனுடன் நடிகர் ஸ்ரீரீஷ் இருக்கிறார். இவர் சிவப்பு நிற டீ சர்ட் அணிந்துள்ளார். இதில் இந்தி தெரியாது போடா என்று எழுதப்பட்டுள்ளது. இவரின் டீ சர்ட் தனியாக இணையம் முழுக்க ஹிட் அடித்துள்ளது. அதை தொடர்ந்து நடிகர் சாந்தனுவும் அவரின் மனைவியும் இதே ஜோடி டி- சர்ட்களை அணிந்துள்ளனர். மீண்டும் வேலையை ஆரம்பித்துவிட்டோம் என்று இவர்கள் டுவிட் செய்துள்ளனர்.

கனிமொழி பாராட்டு

சுவாரஷ்யமாக இருக்கிறது என்று யுவன் டி சர்ட்டை கனிமொழி பாராட்டி இருக்கிறார். இதற்கு அளித்த யுவன் ரொம்ப சுவீட் ஆப் யூ.. மிக்க நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். இவர்களின் இந்த உரையாடல் இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.

டிரெண்டிங்கில் #ஹிந்தி_தெரியாது_போடா

 

#ஹிந்தி_தெரியாது_போடா என்ற ஹேஸ்டேக், தேசிய அளவில் நெட்டிசன்கள் டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர். இதற்கு பாரதிய ஜனதா கட்சியின் நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் எதிர்வினை ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Tamil nadu hindi imposotion yuvan shankar raja tamil t shirt twitter viral trending kanimozhi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X