நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சை கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய நடிகர் ச்ஙகம் சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
லியோ படத்தில் த்ரிஷா – மன்சூர் அலிகான் இணைந்து நடித்திருந்தாலும், அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்த காட்சிகள் இல்லை. இதனிடையே சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலி கான், படத்தில் பாலியல் வன்முறை செய்ய விடமாட்டேன் என்கிறார்கள். எனக்கு ஆசையாக இருந்தது. கட்டிலில் குஷ்பு ரோஜாவை கடத்தியது போல் த்ரிஷாவையும் போடலாமா என்று நினைத்தேன். 150 படங்களில் நான் செய்யாத ரேப்பா என்று தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருந்தார்.
இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த நடிரக த்ரிஷா, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கததில் வெளியிட்ட பதிவில், சமீபத்தில் மன்சூர் அலி கான் என்னை பற்றி அறுவறுக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ பதிவு ஒன்று என் கவனத்திற்கு வந்தது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது அவமரியாதையான பெண் வெறுப்புமிக்க பாலியல் அத்துமீறல் பேச்சு. அவர் இதற்கெல்லாம் ஆசைப்படலாம்.
ஆனால் இவ்வளவு மோசமான ஒருவருடன் திரையை பகிர்ந்துகொள்ளாததற்கு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இனி என் திரை வாழ்க்கையில், இது ஒருபோதும் நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன். இவரைப்போன்ற நபர்கள் மனித குலத்திற்கே கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள் என்று பதிவிட்டிருந்தார். மேலும் மன்சூர் அலிகானின பேச்சுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட கண்டனங்கள் தெரிவித்தனர்.
/indian-express-tamil/media/media_files/AjHGq6mfNT88chdi3eC4.jpg)
இது குறித்து விளக்கம் அளித்த மன்சூர் அலிகான், த்ரிஷாவிம் தவறான வீடியோவை காட்டிவிட்டார்கள். இதற்கெல்லாம் அசரும் ஆளா நான், எல்லோருக்கும் நிறைய வேலை இருக்கு போய் பொழப்பை பாருங்கப்பா என்று கூறியிருந்தார். அவரின் இந்த பதிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனிடையே மன்சூர் அலிகானின் பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதில் மன்சூரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம். அவரின் இந்த பேச்சு கோபத்தை ஏற்படுத்தியது. அவர் தனது மனம் வருந்தி மன்னிப்பு கேட்கும் வரை ஏன் தற்காலிகமாக அவரை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது என்று யோசித்து வருவதாக அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“