லியோ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டில் போது சென்னை ரோஹினி திரையரங்கில் ரசிகர்கள் இருக்கைகள் சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இனி டீசர் அல்லது டிரைலர் கொண்டாட்டங்களை நடத்தக்கூடாது என திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தளபதி விஜய் நடித்துள்ள லியோ படம் நாளை வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்காக லியோ படத்தின் டிரெய்லர் சென்னயைின் சில குறிப்பிட்ட திரையரங்கில் வெளியானது. திரைப்படத்தை பார்க்கும் அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் ஒன்றுக்கு பலமுறை டிரெய்லரை போட சொல்லி பார்த்துக்கொண்டிருந்துள்ளனர்.
இதனிடையே சென்னை ரோஹினி திரையரங்கில் டிரெய்லரை பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்கின் இருக்ககையை சேதப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இனி தியேட்டர்களில் டிரெய்லர் மற்றும் டீசர் வெளியிடப்படாது என்று தியேடடர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும், படத்தின் அதிகாலை காட்சிகள் இருக்காது என்றும் அரசு அறிவித்துள்ளது. லியோ திரையரங்குகளில் காலை 9 மணிக்கு மட்டுமே முதல் காட்சி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்பட வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன், சேதப்படுத்தப்பட்ட சென்னை திரையரங்கின் படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகசவலைதளங்களில் பகிர்ந்து, கிழிந்த சீட் கவர்களையும் உடைந்த இருக்கைகளையும் காட்டினார்கள். இது குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் கூறுகையில், இனி திரையரங்குகளில் டிரைலர்களை வெளியிடுவதில்லை என முடிவு செய்துள்ளோம் என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து மனோபாலா விஜயபாலன் லியோ படத்திற்கு காலை 7 மணி நிகழ்ச்சிகளில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மறுபரிசீலனையை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது. எனவே லோகேஷ்கனகராஜின் லியோ படத்திற்கு காலை 4 மணி அல்லது காலை 7 மணி காட்சிகள் இல்லை என்பது இப்போது தெளிவாகிறது. இதன் மூலம் லியோ படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் டிக்கெட் தேவை அதிகமாக இருந்ததால் ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து லியோ தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, எக்ஸ் பக்கத்தில், நிரம்பி வழியும் பாஸ் கோரிக்கைகள் மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, லியோ ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். ரசிகர்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, நாங்கள் உங்களுக்கு படத்தின் அப்டேட்களை கொடுப்போம் என்று கூறியிருந்தார்.
இதற்கிடையில் படத்தின் முன்பதிவு டிக்கெட் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. லியோ நிறுவனம் முதல் நாள் வசூலில் 34 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. ரஜினியின் ஜெயிலர் சுமார் 18 கோடி ரூபாய் அட்வான்ஸ் வசூல் செய்ததாக இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க் தெரிவித்துள்ளார். லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் மற்றும் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“